BMW நிறுவனத்தின் G310R பைக் 2024 அறிமுகம்! விலை இவ்ளோ தானா…!

இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனை செய்யப்படும் BMW நிறுவனத்தின் G 310 R பைக்கின் புதிய 2024 மாடல் வெளியாகியுள்ளது. இந்த பைக்கின் டிசைன் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை. புதிய கலர் ஆப்ஷன் மட்டுமே வெளியாகியுள்ளது. முன்பு இருந்த அதே டிசைன், மஸ்குலர் பியூயல் டேங்க், என்ஜின் கவுல், சைடு ஸ்லாங் எக்ஸாஸ்ட், 5 ஸ்போக் வீல் உள்ளது.

என்ஜின் வசதியாக 33.5 BHP மற்றும் 28NM டார்க் திறன் உள்ள 313cc சிங்கள் சிலிண்டர் லீகுய்ட் கூல்டு என்ஜின் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் ஒரு 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் வசதி, ஸ்லிப்பர் கிளட்ச் அஸ்சிஸ்ட் வசதி வருகிறது. இந்த பைக் என்ஜின் இப்போது அரசின் புதிய மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு E20 என்ஜினாக உருவாக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வசதிகளாக LED ஹெட்லைட் வசதி, முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ருமன்ட் கன்சோல், 4 விதமான ரைடிங் மோட், 17 இன்ச் அலாய் வீல் உள்ளது. இந்த பைக் 2.85 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலை முதல் தொடங்குகிறது.