மலிவு விலையில் புதிய Redmi 5G போன் அறிமுகம்..! அட எப்பங்க வருது…

பட்ஜெட் விலையில் பட்டையை கிளப்பும் அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் கில்லாடியாக ரெட்மி (Redmi) நிறுவனம்.. தர லோக்கல் விலையில் தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போனான ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G) மாடலை இந்தியாவில் இன்று (ஆகஸ்ட் 1) அறிமுகம் செய்தது. ரெட்மி 12 5ஜி மாடலுடன் சேர்த்து, இதே போனின் 4ஜி வேரியண்ட் ஆன ரெட்மி 12 4ஜி (Redmi 12 4G) மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதலில் 5ஜி மாடலின் விலை நிர்ணயம் என்ன? எப்போது முதல் விற்பனை? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது என்பதை பற்றி பார்ப்போம். பின்னர் 4ஜி மாடலின் விலை மற்றும் அம்சங்களை பற்றி பார்ப்போம்:

ரெட்மி 12 5ஜி அம்சங்கள்: புதிய ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 X 2400 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் உடனான 6.79 இன்ச் ஃபுல்எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேம்பட்ட செயல்திறனுக்காக இந்த ஸ்மார்ட்போன் மாலி-ஜி52 ஜிபியு உடனான ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8ஜிபி வரையிலான ரேம் உடன் வரும் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி விர்ச்சுவல் ரேமிற்கான ஆதரவும் உள்ளது. அறியாதோர்களுக்கு விர்ச்சுவல் ரேம் என்றால், பயன்படுத்தப்படாத இன்டர்னல் ஸ்டோரேஜை தற்காலிகமான ரேம் ஆக “கடன் வாங்கிக்கொள்ள” உதவும் ஒரு ரேம் எக்ஸ்டென்ஷன் அம்சம் ஆகும்.

கேமராக்களை பொறுத்தவரை, ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50 எம்பி ப்ரைமரி ஷூட்டர் + 8 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2 எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. செல்பீக்கள் மற்றும் கால்களுக்காக முன்பக்கத்தில் 8 எம்பி செல்பீ கேமராவும் உள்ளது. ஒரு பெரிய 5,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக நிறுவனத்தின் சொந்த எம்ஐயுஐ 14 ஸ்கின் (அவுட் ஆஃப் பாக்ஸ்) கொண்டு இயங்குகிறது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் ஐபி53 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.

ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்: 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்ட் ஆண்டு ரூ.1,000 என்கிற வங்கிச் சலுகைக்கு பிறகு ரூ.10,999 க்கு விற்பனை செய்யப்படும். இதேபோல், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஆப்ஷன் ரூ.12,499 க்கும், கடைசியாக உள்ள 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வேரியண்ட் ரூ.14,499 க்கும் விற்பனை செய்யப்படும். ரெட்மி 12 4ஜி ஆனது 6.79 இன்ச் 1080பி டிஸ்பிளே கொண்ட 5ஜி மாறுபாட்டை போலவே உள்ளது. இதுவும் கிளாஸ் பேக் பேனலுடன் அதே ஐபி53 ரேட்டிங்கை கொண்டுள்ளது, ஆனால் மீடியாடெக் ஹீலியோ ஜி68 சிப்செட் (Mediatek Helio G88 SoC மூலம் இயக்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உள்ளது. இது யூஎஸ்பி டைப்-சி போர்ட் வழியாக 18W ஃ பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை ரெட்மி 12 4ஜி மாடலானது 50எம்பி வைட்-ஆங்கிள் லென்ஸ் உடனான அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா லென்ஸ் மற்றும் மேக்ரோ கேமராவுடன் ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. ரெட்மி 12 4ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது பேங்க் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைக்கு பிறகு ரூ.8,999 க்கு விற்பனை செய்யப்படும். மறுகையில் உள்ள 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.10,499 க்கு விற்பனை செய்யப்படும்.

ரெட்மி 12 5ஜி மற்றும் ரெட்மி 12 4ஜி ஆகிய இரண்டுமே அதிகாரப்பூர்வ ரெட்மி இணையதளம், எம்ஐ ஹோம், அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஷாவ்மீ பார்ட்னர் ரீடெய்ல் ஸ்டோர்கள் வழியாக வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.