1. அகத்திக் கீரை – இதய ஆரோக்கியம், உடல் சூடு, வயிற்றுப்புண் பித்தம் குறையும்.
2. அப்பக்கோவை கீரை -தோல் நோய் குணமாகும்.
3. அம்மான் பச்சை கீரை – தாய்ப்பாலை அதிகரிக்க உதவுகிறது.
4. அரை கீரை – ஆண்மைத்தன்மையை அதிகரிக்கிறது.
5. கரிசலாங்கண்ணி கீரை – சளி, இருமல் குணமாகும்.
6. கரிசாலை கீரை – இரத்த சோகை குணமாகும்.
7. கறிவேப்பிலை கீரை – தலை சுற்றல் நீங்கும். கண்பார்வையை அதிகரிக்கும்.
8. கற்பூரவள்ளி கீரை – ஓமவல்லிபல் மற்றும் ஈறு பிரச்சனைகளை நீக்குகிறது. சளி குணமாகும்.
9. காசினி கீரை – உடல் சூட்டை குறைக்கிறது.
10. காட்டுக்கடுகு கீரை – பசியைத் தூண்டும்.
11. காட்டுத்தக்காளி கீரை – வறட்டு இருமல் நீங்கும்.
12. கானாவாழை கீரை -எரிச்சல் மற்றும் கண் வலியைப் போக்கும்.
13. கிணற்று பச்சை கீரை – தீக்காயங்களை ஆற்றும்.
14. கீழாநெல்லி – மஞ்சள் காமாலையை குணப்படுத்துகிறது.
15. குப்பை கீரை – நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
16. குமுட்டி கீரை – சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
17. குறிஞ்சாக் கீரை – சர்க்கரை நோயை குணப்படுத்தும்.
18. கொத்தமல்லி கீரை – வயிற்றுப் பிரச்சனை நீங்கும்.
19. கோவை கீரை – வியர்வை வராமல் தடுக்கிறது.
20. சக்கரவர்த்தி கீரை – கனிம வளர்ச்சி.
21. சண்டி கீரை – சிறுநீர் பெருகும்.
22. சாண கீரை – காயங்களை ஆற்றும்.
23. – சூரி கீரை – உடல்சூடு தணிக்கும்.
24. சோம்புகீரை – மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்கிறது.
25. தண்டுக்கீரை – குடல் புண்களை ஆற்றி மலச்சிக்கலை போக்குகிறது.
26. தவசி கீரை – இருமல் குணமாகும்.
27. தாளி கீரை – ஆண்மைத்தன்மையை அதிகரிக்கிறது.
28. துத்தி கீரை – புண் நீக்கம்.
29. துயிலிக்கீரை/தொய்யல்கீரை – இரும்புச் சத்தை அதிகரிக்கிறது.
30. தூதுவளை கீரை – ஆண்மையை அதிகரிக்கிறது, தோல் நோய்களை குணப்படுத்தும்.
31. நாயுருவி கீரை – நரம்புகளை வலுவாக்கும்.
32. பசலைக் கீரை – புற்றுநோய் எதிர்ப்பு பண்பு
33. பண்ணைக்கீரை/மகிலிக்கீரை – உடல் சோர்வு நீங்கும்.
34. பரட்டைக்கீரை – இரத்த அழுத்தக் கோளாறுகளைக் குறைக்கிறது.
35. பருப்பு கீரை – மலச்சிக்கலை நீக்குகிறது.
36. பாலக் கீரை – இரத்த ஓட்டம் மற்றும் சர்க்கரை நோயை மேம்படுத்துகிறது
37. பால்பெருக்கி கீரை / அண்டவாயுக்கீரை – தாய்ப்பாலை அதிகரிக்க உதவுகிறது.
38. பிரண்டை கீரை – செரிமான பிரச்சனை நீங்கும்.
39. புண்ணாக்கு கீரை – ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
40.vபுதினா கீரை – ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது.
41. புளிச்சக்கீரை – ஆண்மையை பெருக்கும், மாலைக்கண் நோயை குணப்படுத்தும்.
42. புளியங்கீரை – எலும்புகளை வலுவாக்கும்.
43. பொடுதலை கீரை – தோல் நோய் குணமாகும்.
44. பொன்னாங்கண்ணிக் கீரை – கண்பார்வையை அதிகரிக்கிறது.
45. மணலி கீரை – மூட்டுவலியைக் குணப்படுத்துகிறது.
46. மணித்தக்காளி கீரை – அல்சர் மற்றும் வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும்.
47. மின்னக் கீரை – நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
48. முசுட்டை கீரை – உடல் வலிமையை அதிகரிக்கிறது.
49. முசுமுசுக்கை கீரை – உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
50. முடக்கத்தான் கீரை – கை மற்றும் கால்களின் செயலிழப்பைக் குணப்படுத்தும்.
51. முருங்கைக் கீரை – கண்களும் உடலும் வலுப்பெறும்.
52. முளைக் கீரை – குழந்தை வளர்ச்சிக்கு ஏற்றது.
53. முள்முருங்கைக்கீரை – மாதவிடாய் வலி குறையும்.
54. முள்ளங்கி கீரை – சிறுநீரக பிரச்சனையை தீர்க்கிறது.
55. மூக்கிரட்டை கீரை – சளி குணமாகும்
56. மூக்கிரட்டை கீரை – சுவாசக் கோளாறுகள் குணமாகும்.
57. வல்லாரைக் கீரை – ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
58. வெந்தயக்கீரை – மலச்சிக்கலை குணப்படுத்துகிறது, மண்ணீரல் மற்றும் கல்லீரலை பலப்படுத்துகிறது.
59. வேலிப்பருத்தி கீரை – சளியை நீக்கி குடல் புழுக்களை நீக்கும்.
60. வேளை கீரை – உடல் பருமனை குறைக்கிறது.
61. நொச்சி இலை – உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது
62. முள்ளிக்கீரை – ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. சிறுநீர் பெருக்கி, உடலில் உள்ள வீக்கம் குறைக்கும்
63. ஆவாரை இலை – நிழலும் குளிர்ச்சியும் தரும் ஆவாரம் இலை