உலகின் டாப் 5 பணக்காரர்கள் யார் யார் - முதலிடத்தில் யார் தெரியுமா….!

உலகின் முதல் பணக்காரர்கள் அடங்கிய 2023 ஆம் ஆண்டுக்கான பில்லியனர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலில் பல்வேறு நாட்டவர்கள் இடம்பிடித்துள்ள நிலையில் முதல் 10 நாடுகளில் பெரும்பான்மை அமெரிக்க நாட்டவர்களே ஆவார்.
அந்த வகையில், உலகின் முதல் 05 பணக்காரர் பற்றிய விபரங்களை பார்ப்போம்.

எலான் மஸ்க் (அமெரிக்கா)

உலக பணக்காரர் பட்டியலில் டெஸ்லா மற்றும் ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 241 பில்லியன் டாலர்கள் ஆகும். தென்னாப்பிரிக்காவில் பிறந்து கனடாவிற்கு குடிபெயர்ந்த எலான் மஸ்க், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திற்கு பட்டம் பெற்றுள்ளார். 2023ம் ஆண்டு முதல் உலகின் முதல் கோடீஸ்வரர் என்ற பெருமையை தக்கவைத்துக்கொண்டுள்ள இவர் தற்போது டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.

பெர்னார்ட் அர்னால்ட் (பிரான்ஸ்)

உலக பணக்காரர் பட்டியலில் 2 ஆம் இடத்தில், லூயி விட்டன் (louix Vuitton) நிறுவனத்தின் நிறுவரான பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார்.
பிரான்சின் மிகப்பெரிய பணக்காரரான சொத்து பெர்னார்ட் அர்னால்ட்டின் சொத்து மதிப்பு 226.7 பில்லியன் டொலர்கள் ஆகும்.

ஜெஃப் பெசோஸ் (அமெரிக்கா)

அமேசான் நிறுவனத்தின் செயல் தலைவரான ஜெஃப் பெசோஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
இவரது நிகர மதிப்பு 156.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 1994ம் ஆண்டு Amazon.com என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஆன்லைன் புத்தக விற்பனை தளம், தற்போது ஆடைகள், அழகு சாதன பொருட்கள், அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பலவற்றையும் உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

லாரி எல்லிசன் (அமெரிக்கா)

லாரன்ஸ் ஜோசப் எலிசன் ஆரக்கிள் கார்ப்பரேஷனின் இணை நிறுவனர், நிர்வாகத் தலைவரான லாரி எல்லிசன் உலக பணக்காரர் பட்டியலில் 4 ஆவது இடத்தில் உள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ள இவரது சொத்து மதிப்பு 147.5 பில்லியன் டொலர்கள் ஆகும்.

பில்கேட்ஸ் (அமெரிக்கா)

வாஷிங்டன்னை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவரான பில்கேட்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். பில்கேட்ஸின் சொத்து மதிப்பு, 119.2 பில்லியன் டொலர்கள் ஆகும்.