தக்காளி விலை அதிகமானா என்ன? இந்த பொருட்ளை 'யூஸ்' பண்ணுங்க! அதே சுவை கிடைக்கும்!

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் தக்காளி விலை என்பது விண்ணை தொட்டுள்ளது. இதனால் பலரும் தக்காளியை சமையலில் சேர்ப்பதை குறைத்துள்ளனர். இந்நிலையில் தான் சுவை மாறாமல் தக்காளிக்கு மாற்றாக சமையலில் சேர்க்கக்கூடிய 5 காய்கறிகள் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் தற்போது தக்காளி விலை என்பது உச்சம் தொட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. போதிய விளைச்சல் இல்லாதததால் தக்காளி விலை வீர்ரென உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தக்காளி விலை படிப்படியாக அதிகரிக்க தொடங்கி மீண்டும் பல இடங்களில் ரூ.200யை தொட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.140க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருச்சியில் ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கும், பிற இடங்களில் கிலோ ரூ.170 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தக்காளி பிரியர்கள் வருத்தமடைந்துள்ளனர். இந்த விலையேற்றம் காரணமாக ஓட்டல்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம் தயாரிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் தக்காளி பயன்பாட்டை முடிந்தவரை குறைத்துள்ளனர். ஒரு காலத்தில் பெரும்பாலான குழம்பு வகைகளில் இடம்பிடித்திருந்த தக்காளி தற்போது அபூர்வமான ஒன்றாக மாறியுள்ளது.
இந்நிலையில் தான் குழம்பு வகைகளில் தக்காளிக்கு பதில் அதே சுவையை கொடுக்கும் பிற 5 பொருட்களை மக்கள் பயன்படுத்தலாம் என்ற 

கவல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மாங்காய். அதாவது தக்காளிக்கு பதில் சாம்பார் உள்ளிட்ட குழம்பு வகைகளில் மாங்காய் பயன்படுத்துவது நல்லதாகும். தக்காளி ரூ.140 முதல் ரூ.170 க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மாங்காய் விலை ரூ.40 முதல் ரூ60க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மாங்காயை பயன்படுத்தலாம்.

இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருப்பது புளி. தக்காளியை விட புளிப்பு தன்மை அதிகமாக புளியில் உள்ளது. இதனால் தக்காளிக்கான சிறந்த மாற்றுப்பொருளாக புளி இருக்கிறது. தற்போது புளி ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தக்காளியை வீட்டில் வாங்கி வைத்தால் சில நாட்களில் அழுகிப்போய்விடும். ஆனால் புளி என்பது நீண்ட நாட்கள் வைத்து நாம் பயன்படுத்தலாம். இதனால் புளியை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.

இந்த பட்டியலில் 3ம் இடத்தில் மலை நெல்லிக்காய் உள்ளது. தக்காளியை போன்ற வடிவத்தில் மிகவும் சிறியதாக பச்சை நிறத்தில் இருக்கும் இந்த மலை நெல்லிக்காயும், ஏறக்குறைய தக்காளியை போன்ற சுவையை கொண்டுள்ளது. மேலும் மலை நெல்லிக்காயில் உள்ள சத்துகளும் ஏராளம். இதனால் மலை நெல்லிக்காயை சமையலில் பயன்படுத்தலாம்.

இதில் 4வது இடத்தில் இருப்பது சுரைக்காய். இதனை கேட்டவுடன் உங்களுக்கு சந்தேகம் ஏற்படலாம். அதோடு சுரைக்காய் எப்படி தக்காளிக்கு மாற்றாக பயன்படுத்த முடியும் என்று நீங்கள் கேட்கலாம். அதாவது சுரைக்காயுடன் நெல்லிக்காய் அல்லது புளியை சேர்த்து குழம்பில் சேர்ப்பதன் மூலம் தக்காளியின் சுவையை ஈடுகட்டலாம். தற்போதைய சூழலில் சுரைக்காய் கிலோ ரூ.20க்கு தான் விற்பனையாகிறது. இதனை மக்கள் ட்ரை செய்து பார்க்கலாம்.

இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருப்பது பூசணிக்காய். இதுவும் ஆச்சரியமளிக்கும் வகையில் உங்களுக்கு இருக்கலாம். இருப்பினும் பூசணிக்காயை பயன்படுத்துவதன் மூலம் தக்காளியின் சுவையை உணவில் கொண்டு வர முடியும். ஏனெறால் தக்காளியை போல் பூசணிக்காயும் லேசாக இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேம் தற்போது பூசணிக்காயின் விலையும் தக்காளியை ஒப்பிடும்போது மிகமிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.