விஜய் பட இயக்குனர் சித்திக் மரணம்! அதிர்ச்சியில் மலையாள திரையுலகம்...

நடிகர் விஜய்க்கு பல படங்களை ஹிட் கொடுத்த இயக்குனர் சித்திக் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.
மலையாளத்தில் பிரபல இயக்குனராக இருந்தவர் சித்திக். மலையாளத்தை தவிர தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். மலையாளத்தில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் சூப்பர் ஹிட் திரைப்படமான ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தை இயக்கினார்.

இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வடிவேலுவின் புகழ்பெற்ற காண்ட்ராக்டர் நேசமணி காமெடி காட்சி இந்த படத்தில்தான் இடம்பெற்றுள்ளது. ஒரு நேரத்தில் வில்லு, சுறா என தொடர்ந்து தோல்விகளை சந்தித்த விஜய்க்கு ‘காவலன்’ படத்தின் மூலம் வெற்றியை கொடுத்தது இயக்குனர் சித்திக் தான்.

இந்நிலையில் திடீரென நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்துள்ளார். அவரது திடீர் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

சந்திரமுகி 2 திரைப்படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகர் என்ன பன்முகத் திறமைகளுடன் விளங்கி வரும் இவர் தற்போது பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் வடிவேலு, ராதிகா சரத்குமார், லக்ஷ்மி மேனன், மனோபாலா, கங்கனா ராணாவத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்ததை தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கு திரைக்கு வர இருப்பதாகவும் படகுழு சில தினங்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. 

இதனால் இப்படம் மீது பயங்கரமான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வரும் நிலையில் புது அப்டேட்டாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் இறுதியில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகவும் இதையொட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி . மேலும் விரைவில் இது குறித்த அறிவிப்பையும் படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.