பொதுவாக, இன்று குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அவரவர் சாப்பிடும் சாப்பாட்டிற்கு ஏற்ற உடல் உழைப்பு இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், இதனை பெற்றோர் நினைத்தால், தடுக்க முடியும். அதாவது, குழந்தைகளுக்காக எளிமையான முறையில், உடற்பயிற்சியை சொல்லிக் கொடுப்பது மூலமாக, அவர்களின் உடலுக்கு வரும் நோய்களை அறவே தடுக்க முடியும். மேலும், அவர்கள் உடல் பருமனை இதன் மூலமாக தடுக்கலாம் என்பதும், சர்க்கரை நோய் உள்ளிட்ட நீரிழிவு நோய்களையும் முற்றிலுமாக தவிர்க்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளுக்கு உடற்பயிற்சி செய்வது கடினமாக இருந்தால், அவர்கள் நிச்சயமாக உடற்பயிற்சி செய்வதில் நாட்டம் கொள்ள மாட்டார்கள். ஆகவே, எளிமையான உடற்பயிற்சிகளை அதுவும், பொழுதுபோக்கான விளையாட்டு உள்ளிட்ட உடற்பயிற்சிகளை குழந்தைகளை செய்ய வைப்பது மிகவும் அவசியம். அதே போன்று, நடனம் ஆடுவது குழந்தைகளுக்கான எளிமையான உடற்பயிற்சி முறைகளில் ஒன்றாகும். இது உடலுக்கும், மனதிற்கும் நல்ல ஆரோக்கியத்தை வழங்கும்.
அதே போன்று மைதானத்திற்கு குழந்தைகளை அழைத்துச் சென்று, ஒரு சில எளிமையான விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்கலாம். ஸ்கிப்பிங் போன்ற உடற்பயிற்சி குழந்தைகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். உடற்பயிற்சி மட்டுமல்லாமல், சிறுவயதிலேயே யோகா போன்ற பயிற்சியையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது, ஒவ்வொரு பெற்றோரின் கடமை என்றும் கூறப்படுகிறது.