நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நாட்டின் கலாச்சாரம் பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இதனை பிரபல பாலிவுட் பாடகி த்வனி பனுஷாலி கார்போ என்ற தலைப்பில் பாடி வெளியிட்டுள்ளார். தனிஷ்க் பாச்சி இசையமைத்துள்ள இந்த பாடலை இயக்குனர் நதீம் ஷா இயக்கியுள்ளார்.
நவராத்திரியை முன்னிட்டு, நாட்டின் கலாச்சாரம், பன்முகத் தன்மையை எடுத்துரைக்கும் விதமாக இந்த பாடல் இயற்றப்பட்டுள்ளது. இதற்கான பாடல் வரிகளை குஜராத்தி மொழியில் பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ளார்.
இந்த பாடல் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வெளியான சில மணி நேரங்களிலேயே சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.