40000 பேருக்கு வேலைவாய்ப்பு! - இன்ப அதிர்ச்சி கொடுத்த டிசிஎஸ்

இந்திய ஐடி சேவை துறை மந்தமான வளர்ச்சியை எதிர்நோக்கி இருக்கும் வேளையில், செப்டம்பர் காலாண்டில் ஊழியர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்த நிலையில் அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்கும் அளவீட்டையும், எண்ணிக்கையும் திருத்தி வருகிறது. இந்த நிலையில் இன்போசிஸ் இந்த வருடம் கேம்பஸ் இண்டர்வியூவ்-க்கு செல்ல விரும்பவில்லை என்ன தெரிவித்திருக்கும் வேளையில் ஒட்டுமொத்த பட்டதாரிகளும், கல்லூரி மாணவர்களும் அதிர்ச்சி அடைந்த நிலையில் டிசிஎஸ் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரியான என் கணபதி சுப்ரமணியம் கூறுகையில் நடப்பு நிதியாண்டிள் 40000 பிரஷ்ஷர்ஸ் ஊழியர்களை கேம்பஸ் இண்டர்வியூவ் மூலம் சேர்க்கும் இலக்கில் சரியான பாதையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். பொதுவாக நாங்கள் வருடத்திற்கு 35000 முதல் 40000 பிரஷ்ஷர் ஊழியர்களை பணியில் சேர்ப்போம், இதை இந்த வருடமும் உறுதி செய்ய உள்ளோம் என சிஓஓ என் கணபதி சுப்ரமணியம் தெரிவித்தார்.