நாடு முழுவதும் மாநிலங்கள், மாவட்டங்கள் வாரியாக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அந்தந்த மாநிலத்தின் சூழலுக்கேற்ப நேரம் நிர்ணயிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டில் மத்திய அரசின் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான (பணி ஒழுங்கு முறை மற்றும் சேவைக்கான நிபந்தனைகள்) சட்டம் இறுதி செய்யப்பட்டது.
அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டது.
ஒவ்வொரு மாநிலமும் இதை அப்படியே பின்பற்றலாம். அல்லது அந்தந்த மாநிலங்களின் சூழல் மற்றும் நடைமுறை தேவைகள் அடிப்படையில் மாற்றியும் அமல்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், 2017ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி வரை ஓராண்டுக்கு மட்டுமே கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்திருக்க தமிழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்பின் அனுமதி மறுக்கப்பட்டு இரவு 10 அல்லது 11 மணிக்குமேல் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்தச் சூழலில் தொழிலாளர் ஆணையரின் பரிந்துரையை ஏற்று கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கான அரசாணை 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டு, மீண்டும் 3 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனிடையே கொரோனா நோய் பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கொரோனா நோய் பரவல் படிப்படியாக குறைந்ததும் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோதிலும், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்படாமலேயே இருந்து வந்தது.
இந்நிலையில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்க 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கான அனுமதி, சமீபத்தில் முடிவுக்கு வந்ததை அடுத்து, இந்த அனுமதியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த ஜூன் மாதம் 5-ஆம் தேதி முதல் ஒரு சில நிபந்தனைகளுடன் இந்த உத்தரவு அமலுக்கு வந்திருப்பதாக தமிழக தொழிலாளர் துறை செயலர் ஆர்.கிர்லோஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நிபந்தனைகள்
மேற்கண்ட நிபந்தனைகளை மீறினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.