விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் தொழிற்சங்கம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார். கடலூரில் 3-வது ஆண்டு அகில இந்திய விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்க துவக்க விழாவை முன்னிட்டு 50 ஆட்டோ ஒட்டுநர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி கடலூர் அடுத்த பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் 50 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளை வழங்கினார். பின்னர் ஆட்டோவில் விஜய் மக்கள் இயக்க ஸ்டிக்கர் ஓட்டி ஆட்டோ ஓட்டுநர்களை பொன்னாடை போற்றி கொளரவபடுத்தினார். தொடர்ந்து ஆட்டோவை புஸ்சி ஆனந்த் ஒட்டி பார்த்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், “கடலூரில் தற்போது 3-வது ஆண்டாக விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை மையபடுத்தி அடுத்த கட்டமாக விரைவில் திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டவுள்ளது.
மேலும் தளபதி விஜய் அறிவுறுத்தலின் பேரில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலமாக ஆட்டோ வாங்கி கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த 30 வருடமாக தளபதி விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் இணைந்து உள்ளனர். தற்போது தமிழகம் முழுவதும் தினந்தோறும் செயலி மூலமாக உறுப்பினர்கள் சேர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தினந்தோறும் எத்தனை பேர் சேர்ந்து உள்ளார்கள், எத்தனை உறுப்பினர்கள் உள்ளார்கள் என்பதனை தளபதி விஜய் அனுமதி பெற்று தெரிவிக்கப்படும்” என்றார்.