பர்பில் நிறத்தில் இருக்கும் முட்டைகோஸை நாம் பொதுவாக வாங்க மாட்டோம். ஆனால் இது மற்ற முட்டைக்கோஸ் போலத்தான் இருக்கும். இந்நிலையில் 100 கிராம் பர்பில் முட்டைக்கோஸில் என்ன சத்துகள் உள்ளது என்பதை தெரிந்துகொள்வோம்.
கலோரிகள்: 31
கார்போஹைட்ரேட்: 7 கிராம்
நார்சத்து: 2.5 கிராம்
சர்க்கரை : 3.9 கிராம்
புரத சத்து: 1.4 கிராம்
கொழுப்பு சத்து: 0.2 கிராம்
வைட்டமின் சி, வைட்டமின் கே , வைட்டமின் பி6, போலேட், பொட்டாஷியம், மான்கனீஸ் , அந்தோசையனின் உள்ளது. இதில் உள்ள அந்தோசயனின் உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கிறது. மேலும் உடலை சேதத்திலிருந்து காப்பாற்றுகிறது. இது வயிற்றின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. பொதுவாக வயிற்றின் செயல்பாடுகளை பார்த்துகொண்டு, மலச்சிக்கலை கட்டுப்படுத்தும்.
இதில் வைட்டமின் கே உள்ளதால் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படாமல் தடுக்கும். இதில் உள்ள நார்சத்து, பொட்டாஷியம், அந்தோசையனின்ஸ் இதய ரத்த கூழாய்களில் ஆரோக்கியத்தை பாதுகாப்போம். குறிப்பாக ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் ஏற்படாமல் தடுக்கும்.
இதில் குறைந்த கலோரிகள் இருப்பதால் சுகர் பேஷண்ட்ஸ் இதை எடுத்துகொள்ளலாம். இதில் உள்ள போலேட் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். தாவர வகை உணவில் இருந்து இரும்பு சத்தை உள்வாங்கிக் கொள்ள உதவுகிறது.