நமது விரல்களில் இருக்கும் நகங்களை வைத்து நமது உடலில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை நாமலே அறிந்து கொள்ளலாம். நமது உடல் நிலைக்கேற்ப நகங்களின் நிறங்களும் மாறுபட்டு காணப்படும்.
முதலாவதாக நகம் வெளுத்து காணப்பட்டால் அவர்களுக்கு ரத்த சோகை உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அது மட்டுமின்றி கல்லீரல் தொடர்புடைய நோய்களும் இருக்க அதிக வாய்ப்புள்ளது.
இரண்டாவதாக ஒரு சிலருக்கு நகம் வெளுத்து காணப்பட்டாலும் அதன் ஓரங்களில் மிகவும் கருமையாக இருக்கும். அவ்வாறு இருப்பவர்களுக்கு இருதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் காணப்படும்.
மூன்றாவதாக நகம் மஞ்சளாக காணப்பட்டால் அவர்களுக்கு பூஞ்சை தொற்று இருப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம். அத்தோடு தைராய்டு இருந்தாலும் நகமானது மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
நான்காவதாக நகத்தில் குழி இருப்பது போல் காணப்படும். அவ்வாறு காணப்பட்டால் அவர்களுக்கு சொரியாசிஸ் மற்றும் மூட்டு வலி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். ஐந்தாவதாக நகமானது ஆங்காங்கே உடைந்து காணப்பட்டால் கட்டாயம் அவர்களுக்கு கால்சியம் மற்றும் தைராய்டு சம்பந்தமான குறைபாடுகள் இருக்கும்.
அதேபோல பலரது வீடுகளில் நகங்களை வாயிலேயே கடித்து துப்பும் பழக்கம் ஒரு சிலர் வைத்திருப்பர். அவ்வாறு இருப்பவர்கள் கட்டாயம் மன அழுத்தம் மற்றும் மன நோய் சம்பந்தமான பிரச்சனைகளுடன் காணப்படுபவர்.
இவ்வாறு தங்களின் நகங்களை வைத்து உடலில் எவ்வித நோய்களால் பாதிப்படைந்துள்ளீர்கள் என்பதை தாங்களாகவே அறிந்து கொள்ளலாம். மேற்கொண்டு இவ்வாறு அறிவதால் ஆரம்ப கட்டத்திலேயே இதற்குரிய மருத்துவத்தையும் எடுத்துக் கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.