நமது உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான நுரையீரலை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். ஆக்சிஜனை நமது உடலுக்குள் செலுத்தி நாள் முழுவதும் ஆற்றலாக வைத்திருக்க நுரையீரல் உதவுகிறது. இவ்வாறு சுவாசிப்பதினால் காற்றில் உள்ள கிருமிகளால் விரைவிலேயே நுரையீரலானது பாதிப்படைந்து விடுகிறது. இது நம்மை சுற்றியுள்ள காரணங்கள் என்று கூறினாலும் நாம் செய்யும் சில தவறுகளாலும் நுரையீரல் அதிகளவு பாதிப்படைகிறது. அந்த வகையில் புகைப்பிடித்தல் உடலில் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றம் போன்றவையையும் இதற்கு முக்கிய காரணம். அன்றாட உணவு முறையில் இந்த பதிவில் வரும் 10 உணவுமுறைகளை எடுத்துக் கொண்டாலே போதும் நுரையீரலை மிக ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
மஞ்சள்
நம் உண்ணும் உணவில் மஞ்சள் எடுத்துக் கொள்வதால் இது ஓர் கிருமி நாசினியாக பயன்படுகிறது. குறிப்பாக ஆஸ்துமா , ரெஸ்பெக்ட்ரி தொற்று போன்றவற்றைகளில் இருந்து பாதுகாக்க இது ஒரு கவசமாக உள்ளது. இது மட்டுமின்றி நுரையீரல் சார்ந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் மஞ்சள் பயன்படுகிறது.
இஞ்சி
இஞ்சி எடுத்துக் கொள்வதால் இது ஒரு ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக பயன்படுகிறது. நுரையீரலில் இருக்கும் சளியை அகற்ற மிகவும் உதவிகரமானதாக இருக்கும். மேற்கொண்டு இதில் இருக்கும் ஜிஞ்சரால் என்ற காரணியானது நுரையீரலில் படிந்திருக்கும் அழுக்குகளை சுலபமாக வெளியேற்றும். சுவாசத்தை சீராக வைக்கவும் இஞ்சி பெரிதும் உதவுகிறது.
பூண்டு
பூண்டை எடுத்துக் கொண்டால் நுரையீரல் வீக்கம் ஏற்படாமல் சுவாசத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். இதனை அன்றாட உணவில் எடுத்துக் கொள்வதால் நுரையீரலில் ஆரோக்கியம் பலம் பெறும்.
கிரீன் டீ
கிரீன் டீயில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் நுரையீரல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவும். மேற்கொண்டு இதில் உள்ள வேதிப்பொருள் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும்.
கீரைகள்
நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க கீரை வகைகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். நுரையீரல் வீக்கம் நுரையீரல் புற்றுநோய் ஆகியவற்றை தடுக்கவும் இந்தக் கீரைகள் உதவுகிறது. நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கீரை எடுத்துக்கொள்வது அவசியம்.
ஒமேகா 3
குறிப்பாகவே உடலுக்கு ஒமேகா 3 அதிக அளவு தேவைப்படும். ஒமேகா 3 உள்ள உணவுகளை அதிக அளவு எடுத்துக் கொண்டால் நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்க முடியும்.எனவே தினம் தோறும் உணவில் நுரையீரல் பாதுகாப்பதற்கு மட்டுமின்றி இதர தேவைகளுக்காகவும் மீன் வால்நட் பாதாம் போன்ற பொருள்களை எடுத்துக் கொள்ளலாம்.
குருஸிஃபெரஸ் காய்கறிகள்
ருசி சரஸ் காய்கறிகள் என்றால் முட்டைகோஸ் ப்ரோக்கோலி காலிபிளவர் போன்றவை ஆகும். இந்த காய்கறிகளில் அதிக அளவு ஆன்டிஆக்சிடென்ட் இருப்பதால் நுரையீரலில் உள்ள நச்சுக்களை சுலபமாக வெளியேற்றும். குறிப்பாக நுரையீரலில் உள்ள செல்கள் ஏதும் சேதம் அடையாமல் பாதுகாக்க இந்த க்ரூஸிஃபெரஸ் காய்கறிகள் உதவுகிறது.
ஆப்பிள்
ஸ்கோர் சிட்டி, கேட்டசின்கள் தொற்று நோய் மற்றும் இன்பிளமேஷனை குறைக்க உதவி புரியும். தினம் தோறும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் ரெஸ்பரேட்டரி சிஸ்டம் நன்றாக செயல்படும். சிட்ரஸ் பழங்கல்: சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு எலுமிச்சை போன்றவற்றை சாப்பிட்டு வருவதால் நிமோனியா போன்றவை ஏற்படாமல் இருக்கும். எனவே இதனை ஜூஸாகவோ அல்லது பலமாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
அவகாடோ
அவகாடோவில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது இதன் நுரையீரலுக்கு மட்டுமின்றி உடலில் உள்ள அனைத்து வித பிரச்சனைகளையும் நிவர்த்தியடைய செய்யும். இதில் வைட்டமின் கே மற்றும் டி இ போன்ற பல சத்துக்கள் நுரையீரலுக்கு மட்டுமின்றி அனைத்திற்கும் ஆரோக்கியத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். மேலே குறிப்பிட்டுள்ள 10 உணவு பொருட்களை தினந்தோறும் நாம் அன்றாட உணவில் எடுத்துக் கொண்டால் மிக ஆரோக்கியமாகவும் எதிர்வரும் தொற்றுகளில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம்.