நிச்சயம்.. இந்தியா உலகக் கோப்பை வெல்லும்!! - ஜாம்பவான் ரிச்சர்ட்ஸ்

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 8 லீக் போட்டியில் விளையாடியுள்ள இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் கடைசி லீக் போட்டியில் இன்று நெதர்லாந்து அணியை எதிர்கொண்டுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வலுவான இலக்கை நினைக்கும் நோக்கில் விளையாடியது. அதன்படி இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 410 ரகளை குவித்துள்ளது.
இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் இந்தியா இதேபோன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். என்ன நடந்தாலும் இந்த மனநிலையை விட்டு விடக்கூடாது. எதிர்மறை மனநிலைகளை அனுமதிக்க கூடாது.

கபில்தேவ், தோனிக்கு பிறகு ரோகித் ஷர்மா உலக கோப்பையை தூக்க வேண்டும். தோல்வி அடையாமல் தொடர் வெற்றிகளுடன் நடப்பு உலக கோப்பை வெல்வதை நோக்கி இந்திய அணி சென்று கொண்டிருக்கிறது. இந்திய அணியில் நான் இடம் பெற்றிருந்தாலும் அதே மனநிலை தான் கொண்டிருப்பேன். இதுவரை நன்றாக விளையாடி விட்டோம், எனவே ஏதோ ஒரு கட்டத்தில் மோசமான ஆட்டம் தந்து தீருவோம் என்ற பயம் ஏற்படலாம் அத்தகைய எதிர்மறை சிந்தனைகளை மனதில் இருந்து அறவே களைத்துக் குழி தோண்டி புதைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.