நாம் மேற்கொள்ளும் ஆலோசனைகள் உறுப்பு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும்..!

நாம் மேற்கொள்ளும் ஆலோசனைகள் உறுப்பு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும்..!

அனைத்து வளரும் நாடுகளுக்கும் பொதுவாக உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கும், உரையாடுவதற்குமான ஒரு தளமாக பிரிக்ஸ் கூட்டமைப்பு அமைந்துள்ளது.

இந்த கூட்டமைப்பு இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கியதாகும்.

பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்த ஆண்டு தலைமை பொறுப்பை வகித்த சீனா சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட காணொலி வழி 14வது உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் பிரேசில், தென் அமெரிக்க தலைவர்களும் பங்கேற்றனர்.

‘கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மீட்சி பெறுவதற்கு பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமாகவே பயனுள்ள பங்களிப்பை செய்ய முடியும். கடந்த சில ஆண்டுகளாக பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு மாற்றங்கள், உறுப்பு நாடுகளின் செல்வாக்கை அதிகரித்திருக்கிறது. மேலும், புதிய வளா்ச்சி வங்கி (என்.டி.பி) உறுப்பினா்களை அதிகரித்திருப்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். என்.டி.பி உறுப்பு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு, அதன் குடிமக்களை பயனடையச் செய்திருக்கிறது. இன்றைக்கு நாம் மேற்கொள்ளும் ஆலோசனைகள், உறுப்பு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான யோசனைகளை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது..’ என்று பிரிக்ஸ் 14வது ஆண்டு மாநாட்டில் காணொலி வழியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி தனது தொடக்க உரையில் தெரிவித்தார்.