Vijay Sethupathi Announces Change In Acting Choices: No More Villains For Now

நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரம் கூறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, வில்லனாக நடிக்க நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. வில்லனாக நடிப்பதில் சில சிக்கல்கள் உள்ளது. இதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. ஹீரோவின் இமேஜை குறைக்காமல் நடிக்கச் சொல்கிறார்கள்.
வில்லனாக நடிக்க விருப்பமில்லை என்று சொன்னால், கதையையாவது கேளுங்கள் எனச் சொல்கிறார்கள். அதனால் சில வருடங்களுக்கு வில்லனாக நடிக்க வேண்டாம் என முடிவு செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.