இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழில் ‘நீர் வழிபடூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேவிபாரதி அருந்ததியர் சமூகத்தின் வலிகளைப் பதிவுசெய்த ‘பலி’, ‘பிறகொரு இரவு’ போன்ற சிறுகதைகள் மற்றும் ”நொய்யல்’ நாவல் மூலம் அறியப்பட்டவர். ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சேர்ந்த இவரின் இயற்பெயர் ராஜசேகரன். ஆரம்பப் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். அதன்பின் முழு நேர எழுத்தாளராக மாறி கடந்த 40 ஆண்டுகளாக சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். இவருடைய மூன்றாம் நாவல்தான் ‘நீர்வழிப் படூஉம்’. இந்நாவல், குடி நாசுவர் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்வியலையும் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அவனுடன் சமூகம் கொள்ளும் உறவைப் பற்றி பேசும் நாவலாகும்.
ளிய மனிதர்களின் வாழ்வியலையும், வாழ்வின் எதார்த்தையும் அதன் தன்மை மாறாமல் பிரதிபலிப்பதில் கைதேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதி. அவருக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கிய வட்டராத்தைச் சேர்ந்த பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வாகியுள்ள ‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நொய்யல் மனிதர்களின் வாழ்வியலை தொன்மங்களின் துணையுடன் வரைந்து காட்டும் தம் எழுத்து நடையால் கவனம் பெற்ற எழுத்தாளர் ராஜசேகரன் தேவிபாரதியின் ‘நீர்வழிப் படூஉம்’ நாவல் சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்” என பதிவிட்டுள்ளார்.