அதிக வட்டி விகிதங்கள் வழங்கும் தபால் நிலை சிறு சேமிப்பு திட்டங்கள்!

முதலீடு செய்வது பணத்தை பல மடங்காக பெருக்குவதற்கான அற்புதமான வாய்ப்பாகும். ஆனால் நாம் எதில் முதலீடு செய்கிறோம் என்பது மிகவும் அவசியம். நம்பகமான முதலீடுகள் செய்தால் மட்டுமே உறுதியளிக்கப்பட்ட ரிட்டன்களை நம்மால் பெற இயலும். அந்த வகையில் ஏராளமான நம்பகத்தன்மை பெற்ற முதலீட்டு திட்டங்கள் உள்ளன. தனிநபரின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு திட்டத்தை தேர்வு செய்து அதில் முதலீடு செய்வதன் மூலமாக நல்ல ரிட்டன்களை பெறலாம். உங்களது பணத்தை தபால் நிலைய கிளைகளில் முதலீடு செய்வதன் மூலமாக கணிசமான ரிட்டன்களை நீங்கள் பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? அரசு ஆதரவு பெறக்கூடிய பல்வேறு விதமான சிறுசேமிப்பு திட்டங்கள் உள்ளன.

மன்த்லி இன்கம் ஸ்கீம் (Monthly Income Scheme), நேஷனல் சேவிங்ஸ் செர்டிபிகேட் (National Savings Certificate), பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டு (Public Provident Fund) மற்றும் சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் (Senior Citizen Savings Scheme) போன்ற சில பிரபலமான சிறு சேமிப்பு திட்டங்களில் ஒருவர் முதலீடு செய்யலாம். அதிக வட்டி விகிதங்களை வழங்கக்கூடிய போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்டுகள் சிலவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் :

60 வயதிற்கு மேற்பட்டோர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் 8.2 சதவீதம் வரையிலான வட்டியை ஒரு ஆண்டிற்கு வழங்குகிறது. இந்த திட்டத்தில் குறைந்தப்பட்சமாக 1000 ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை ஒருவர் முதலீடு செய்யலாம்.

சுகன்யா சம்ரிதி அக்கவுண்ட் :

ஒரு குடும்பத்தில் உள்ள இரண்டு பெண் பிள்ளைகளின் பெயரில் சுகன்யா சம்ரிதி அக்கவுண்ட்டை திறக்கலாம். இந்த சிறுசேமிப்பு திட்டத்திற்கு ஒரு ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது.

நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் :

இந்த சிறுசேமிப்பு திட்டத்தில் ஒருவர் தபால் நிலையத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாயையும், 100 ரூபாயின் எண்ணிக்கையில் முதலீடு செய்யலாம். இந்த சிறு சேமிப்பு திட்டத்திற்கு ஒரு ஆண்டிற்கு 7.7% வட்டி கொடுக்கப்படுகிறது.

கிசான் விகாஸ் பத்திரம் :

நிர்ணயிக்கப்பட்ட தபால் நிலைய கிளைகள் அனைத்திலும் கிசான் விகாஸ் பத்திரம் கிடைக்கும். இதில் குறைந்தப்பட்சமாக ஒருவர் 1000 ரூபாயை முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. இந்த சிறுசேமிப்பு திட்டத்திற்கு ஒரு ஆண்டிற்கு 7.5 சதவீதம் வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது.