தமிழர்களின் வீரத்தை நிரூபிக்கும் பாரம்பரிய விளையாட்டாக 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது ஜல்லிக்கட்டு. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் திநாளையொட்டி இன்று மதுரை மாவட்டத்தில் துவங்க இருக்கிறது. அதன்படி இன்றைய தினம் மதுரை அவனியாபுரத்தில் காலை 7 மணிக்கு கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இந்த போட்டி மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக கலந்து கொள்ளும் காளைகளின் உரிமையாளர்களுக்கு qr code போட்டிருக்கக்கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மொத்தம் 1,000 காளைகள், 800 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சுற்றுக்கு தலா 75 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு சற்று என்று அடுத்தடுத்த சுற்றுகள் நடைபெறவுள்ளது. சிறந்த மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சிறந்த மாடுபிடி வீரர்கள் மாற்றும் சிறந்த காளைகளின் உரிமையாளருக்கு தலா ஒரு கார்கள் வழங்கப்பட உள்ளன.
முக்கிய பிரமுகர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளன.
இந்த போட்டிக்காக 2000க்கும் மேற்ப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 40 மருத்துவ குழுக்கள் மற்றும் 108 அம்புலன்ஸ் சேவை உள்ளிட்டவை பாதுகாப்பு காரணமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாடிவாசலில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்படாமல் இருக்க வாடிவாசலில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை தென்னை நார் பரப்பப்பட்டு உள்ளது.