பனைமரத்தின் அனைத்து பாகங்களுமே நமக்கு பயன் தரக்கூடியது தான். அதிலிருந்து கிடைக்கும் பதனி, நுங்கு , பழம், கிழங்கு என அனைத்துமே உடலுக்கு நன்மை தரக்கூடியது, அதில் இன்று கிழங்கின் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம்.
நன்மைகள் :
பனை மரத்தின் ஆணிவேரின் ஒரு பகுதி தான் பனங்கிழங்கு. அதிலிருந்து தான் ஒரு மரமே உற்பத்தி ஆகிறது.இந்த பனங்கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான பலம் கிடைக்கும்.
உடல் எடை அதிகரிப்பு :
உடல் மெலிந்து காணப்படுபவர்களுக்கு நல்ல ஊட்டம் அளித்து உடல் எடை அதிகரிப்பை தரும்.
மலச்சிக்கல் :
இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக இயக்கி மலச்சிக்கலை போக்கும்.
பித்தம் :
பித்தம் அதிகமாக இருப்பவர்கள் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது பித்தத்தை அதிகரிக்க செய்யக்கூடியது. ஒருவேளை எடுத்துக் கொண்டால் நான்கு மிளகு சாப்பிட்டால் பித்த அளவை சமநிலைப்படுத்தும்.
சர்க்கரை நோய் :
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் தரைகீழ் விளையும் கிழங்குகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆனால் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் இந்த பனங்கிழங்கை எடுத்துக் கொள்ளலாம்.
வளர் இளம் குழந்தைகள் :
வளரும் குழந்தைகளுக்கு பனங்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக்கி அதை வெயிலில் காய வைத்து அரைத்து, பாலில் கலந்து கொடுத்து வந்தால் உடல் வலிமை பெறும்.
கருப்பை :
கர்ப்பப்பை பலவீனமாக உள்ள பெண்கள் தேங்காய் பாலுடன் பனங்கிழங்கு மாவையும் சேர்த்து எடுத்துக் கொண்டால் கர்ப்பப்பை பலம் பெறும்.
சாப்பிடும் முறை :
பலரும் இதை அவித்து தான் எடுத்துக் கொள்கிறார்கள் ஆனால் பனங்கிழங்கு கிடைக்கும். சமயங்களில் அதிகமாக வாங்கி அதை வேகவைத்து நன்றாக காய வைத்து அரைத்து வைத்து, தேவைப்படும்போது அந்த மாவில் புட்டு, கூல், கஞ்சி என பல பதார்த்தங்களையும் செய்து சாப்பிடலாம். காய்கறி, பழங்கள் போன்றவற்றிற்கு எப்படி சீசன் உள்ளதோ, அதுபோல் இதற்கும் சீசன் உண்டு. மார்கழி, தை, மாசி போன்ற மாதங்களில் கிடைக்கும்.