மதுரை to கொல்லம்.. கண்ணாடி ரயில் பயணம்..! மக்கள் மகிழ்ச்சி

மதுரை மற்றும் கொல்லம் வழித்தடத்தில் மேற்கூரை கண்ணாடியால் ஆன ரயில் பெட்டியை கொண்ட புதிய ரயில் இயக்கப்பட உள்ளதால் தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் செங்கோட்டை மற்றும் புனலூர் வழித்தடத்தில் சென்னை -கொல்லம், மதுரை -குருவாயூர், பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும், எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி வாரம் இரண்டு முறை ரயில் ஆகியவை இயக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள ரயில் பாதைகளிலேயே மிகவும் குறைவான வேகத்தில் அதாவது 30 கிலோமீட்டர் ரயில் இயக்கப்படுவது இந்த வழித்தடத்தில் தான். இந்த நிலையில் தற்போது 22 நவீன பெட்டிகளை கொண்ட சோதனை ரயில் ஓட்டம் மதுரையிலிருந்து கொல்லம் இடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.