Want Glowing Skin? How to Deal with Dry Skin Effectively

வெயில் காலத்திலும் சரி மழைக் காலத்திலும் சரி வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு பிரச்சனை தான். என்ன செய்தாலும் வறண்டு கொண்டே இருக்கும். அப்படி வறண்டு போகாமல் இருக்க இவற்றை செய்து பாருங்கள்.
ஒரு தேக்கரண்டி மஞ்சளுடன் ஒரு தேக்கரண்டி பன்னீர் மற்றும் சிறிது பால் ஊற்றி, குழைத்து சருமத்தில் தேய்த்து, வாரம் ஒருமுறை குளித்து வந்தால் சருமம் வறண்டு போவது குறையும்.

இரண்டு தேக்கரண்டி தேனும் அதனுடன் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யும் சேர்த்து குழைத்து சருமத்தில் தடவ வேண்டும். பின் காய்ந்ததும் நன்னீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வது உங்களின் சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தைத் தரும்.

ஒரு குட்டி துண்டு வாழைப்பழம் அதனுடன் ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் மற்றும் தேனை சேர்த்து, நன்கு மசித்து கலந்துக்கொள்ள வேண்டும். இதை சருமத்தில் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் மாற்றத்தை நீங்களே காணலாம்.

ஆமணக்கு எண்ணெய்யுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து, குழைத்து சருமத்தில் தேய்த்து கழுவி வர, வறண்ட சருமம் மெல்ல மெல்ல ஈரப்பதம் கொண்டு மாறும்.

தூங்கச் செல்லும் முன்பு சருமத்தில், தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் நல்ல பலன்களைப் பெறலாம்.
கற்றாழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் தேய்த்து வர சருமத்திற்கு ஈரப்பதம் ஏற்படும். ஓட்ஸ் செய்து பசை போன்று சருமத்தில் தடவி குளித்தால், ஈரப்பதத்தை தரும். அதுமட்டுல்ல! உடலில் ஏதேனும் சரும பிரச்சனைகள் ஏற்பட்டாலும் குளிக்கும் தண்ணீரில் இதை கலந்து குளித்து வந்தால் சரியாகும்.

முக்கியமாக உணவில் பழங்களை சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். அதோடு மிக முக்கியமாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவுகளை சேர்த்துக் கொள்ளுதல் நல்லது. இது சருமத்தை வறண்டு போகாமல் பாதுகாக்கும். மேலும் தண்ணீர் குடிக்கும் அளவை எப்போதும் குறைத்து கொள்ள கூடாது.