இந்தியாவிலேயே முதல்முறையாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை..!

முதல்முறையாக இந்தியாவிலேயே நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். ஹவுரா மைதானம் முதல் எஸ்பிளனேடு வரை 16.6 கி.மீ. தூரத்தில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தாஜ்மகால் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் மெட்ரோ ரயிலில் சென்றுவர வசதி செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஹூக்ளி நதியில் 32மீ ஆழத்தில், 520மீ நீளத்திற்கு நீருக்கடியில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஹூக்ளி ஆற்றுத் தண்ணீர் மட்டத்தில் இருந்து 16மீ ஆழத்தில் மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. நீருக்கடியில் சுமார் 520மீ நீளத்தை 45 நொடிகளில் மெட்ரோ ரயில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ ரயில் சேவை மூலம் தினசரி 7 லட்சம் பயணிகள் பயனடைவார்கள் எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொடர்ந்து, நீருக்கடியிலான மெட்ரோ ரயிலில் பயணித்து மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

சுற்றுலாத் தலங்களின் இணைப்பை மேம்படுத்த ஆக்ரா மெட்ரோ சேவையையும் காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். கவி சுபாஷ், தரடாலா -மஜெர்ஹாட் உள்ளிட்ட மெட்ரோ ரயில்களின் சேவையையும் தொடங்கி வைத்தார். கொச்சி மெட்ரோ, மீரட், புனே மெட்ரோ ரயில்களின் சேவைகளையும் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பு போக்குவரத்து இணைப்புத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.