சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என்று புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளத கங்குவா படக்குழுகார்த்தி, அஜித், ரஜினி என முன்னணி நடிகர்களை இயக்கி வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் சிறுத்தை சிவா, தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரலாற்று பின்னணியில் மிகப் பிரம்மாண்டமாக கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. ஓராண்டுக்கு மேலாக படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. படத்தை 10 சர்வதேச மொழிகளில் வெளியிடுவதற்கான பணிகளிலும் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அதனால், படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.
கங்குவா படத்தின் புதிய போஸ்டர்படம் குறித்த அப்டேட் கொடுங்கள் என்று சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் சற்றுநேரம் முன்பு படத்தின் டீசர் மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என்று மிரட்டலான புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. அதில், போர்க்களத்தில் ரத்தம் சொட்ட சூர்யா நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரே மிரட்டலாக உள்ளதால், கங்குவா படத்தின் டீசருக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். அனைத்து பணிகளையும் முடித்து கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.