Ajith Mania Returns! Three Epic Films Back on the Big Screen This May (India)

விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் ஆன நிலையில் இந்த படம் மிகப்பெரிய வசூலை குவித்து வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் சூப்பர் ஹிட் படம் ரிலீஸ் ஆனதால் அஜித் ரசிகர்களும் அவரது ரீரிலீஸ் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் வரும் மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் ‘மங்காத்தா’ மற்றும் ‘பில்லா’ ஆகிய 2 படங்கள் ரீரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ‘மங்காத்தா’ ‘பில்லா’ மட்டுமின்றி ‘நேர்கொண்ட பார்வை’ படமும் மே 1ஆம் தேதி ரீரிலீஸ் ஆக இருப்பதாகவும் இதனை அடுத்து அஜித்தின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு ட்ரிபிள் விருந்து கிடைக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மூன்று படங்களுமே திரையில் வெளியான போது மிகப்பெரிய வசூலை பெற்ற நிலையில் இந்த படங்கள் ரீரிலீசிலும் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.