Important Announcement! TN Board Exam Results Coming Soon (Details Here)

தமிழ்நாட்டில் 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6ம் மற்றும் மே 10ம் தேதிகளில் வெளியாகும் என பள்ளிகல்வித்துறை அறிவிப்பு தமிழ்நாட்டில் 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6ம் மற்றும் மே 10ம் தேதிகளில் வெளியாகும் என பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல் பரவிய நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி தொடங்கிய 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு 25 ஆம் தேதி முடிவடைந்தது. அதேபோல 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கடந்த மார்.26 தொடங்கி ஏப். 8 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி அண்மையில் நிறைவடைந்தது. இதனையடுத்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி, மே.6 மற்றும் மே. 10 ஆம் தேதிகளில் 12ம் வகுப்பு, 10ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.