இயக்குனர் நெல்சன் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சுவாரஸ்யமான உள்ளடக்கம் கொண்ட படங்களைத் தயாரிப்பதே நோக்கம்” என்றார். அதன்படி கவின் நடிக்கும் புதிய படத்தை அவர் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘ஜெயிலர்’ படங்களின் மூலம் இயக்குனராக கவனம் பெற்றவர் நெல்சன் திலீப்குமார். அடுத்து ‘ஜெயிலர் 2’ படத்தை இயக்கப் போவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ‘தயாரிப்பாளர்’ அவதாரம் எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “நான் 20 வயதிலிருந்தே பொழுதுபோக்குத் துறையில் பயணித்து வருகிறேன். இந்தத் துறையில் ஏற்ற தாழ்வுகளைப் பார்த்திருக்கிறேன். எனது தயாரிப்பு நிறுவனமான ‘ஃப்ளெமென்ட் பிக்சர்ஸ்’ குறித்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுவாரசியமான உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களை உருவாக்குவதே இதன் நோக்கம். முதல் படம் குறித்த அறிவிப்பை மே 3-ம் தேதி வெளியிடுகிறேன்.
அதன்படி கவின் நடிக்கும் புதிய படத்தை நெல்சன் தயாரிக்க இருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை நெல்சனின் உதவியாளர் இயக்குவதாகக் கூறப்படுகிறது.