இன்ஸ்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு ரூ.4,000 அபராதம்! - தமிழக காவல்துறை அதிரடி..

காப்பீடு இல்லாத வாகனங்கள் கண்டறிந்தால் முதன்முறை குற்றத்திற்கு ரூ.2,000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும்.

குற்றம் தொடர்ந்தால் ரூ.4,000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கள அதிகாரிகள் மூன்றாம் நபர் காப்பீடு இல்லாத வாகனங்களை கண்டறிந்து மோட்டார் வாகன சட்டம், 1988, பிரிவு 196-படி அபதாரங்கள் விதிக்க வேண்டும் மற்றும் வாகன உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஏற்படுத்த வேண்டும். அமலாக்கத்துறை அதிகாரிகள் மோட்டார் வாகன சட்டம் 1988-ன் படி, மோட்டார் வாகன காப்பீடு இல்லாத வாகனங்களை கண்டறிந்து கீழ்கண்டவாறு அபராதங்கள் விதிக்கப்படும். முதன்முறை குற்றத்திற்கு 2,000 அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

மேற்படி குற்றம் தொடர்ந்தால் 4,000 அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பிரிவு 196 மோட்டார் வாகனச் சட்டத்தின் படி எந்த வித விலகலும் இல்லாமல் சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் மூன்றாம் நபர் காப்பீடு செய்து வாகனங்களை இயக்குமாறு வலியுறத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.