தமிழ்நாட்டிற்கு விரைவில் முதல் புல்லட் ரயில்..!

தமிழ்நாட்டில் புல்லட் ரயில் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான டிபிஆர் அறிக்கை தயாரிக்கும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன.

இந்த புல்லட் ரயில் அமைக்கப்படும் இடம் எங்கே வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது சென்னை, பெங்களூர் (பெங்களூரு) மற்றும் மைசூர் (மைசூரு) ஆகிய நகரங்களை தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள 9 நிலையங்கள் வழியாக இணைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை – மைசூர் அதிவேக ரயில் (CBM புல்லட் ரயில்) திட்டம் 435 கிமீ தூரம் செல்லும் உத்தேச அதிவேக ரயில் பாதை.இதில் தொடக்க ஸ்டேஷன் சென்ட்ரல் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ராஜா முத்தையா ரோடு – சென்ட்ரல் ரயில் நிலையம் இடையே இந்த புல்லட் ரயில் நிலையம் அமைக்கப்படும்.

இது முழுக்க முழுக்க அண்டர் கிரவுண்ட் முறையில் சென்னையில் அமைக்கப்படும். சென்னைக்கு வெளியே செல்ல செல்ல இது வெளியே வரும். சென்ட்ரல் ஏற்கனவே மெட்ரோ, பேருந்து நிலையம், ரயில் நிலையத்தை கொண்டு இருப்பதால் புல்லட் ரயில் வரும் பட்சத்தில் அந்த பகுதியே மாற்றம் அடையும்,

நிலம் எடுக்கும் பணி: இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் இந்த வருடம் தொடங்க உள்ளது. சென்னை சென்ட்ரல் அருகே, பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர், பங்காரப்பேட்டை, பெங்களூரு, சென்னபட்னா, மாண்டியா மற்றும் மைசூரு மார்க்கம் வழியாக இந்த ரயில் பயணிக்கும். இந்த திட்டத்தின் முக்கிய புள்ளிவிவரங்கள் முன்மொழியப்பட்டது: 435 கி.மீ

அதிகபட்ச வேகம்: 350 கி.மீ

செயல்பாட்டு வேகம்: மணிக்கு 320 கி.மீ

சராசரி வேகம்: 250 kmph

ட்ராக் கேஜ்: ஸ்டாண்டர்ட் கேஜ் – 1435 மிமீ

சிக்னலிங்: DS-ATC

ரயில் திறன்: 750 பயணிகள்

இழுவை: 25 KV AC மேல்நிலை கேடனரி (OHE)

பாதுகாப்பு: பூகம்பம் ஏற்பட்டால் தானாக நிறுத்துவதற்கும், நிலநடுக்கம் கண்டறிதல் மற்றும் எச்சரிக்கை அமைப்பு (யுரேடாஸ்) ஆகியவை கொண்டது.

சென்னை – மைசூர் ஹெச்எஸ்ஆர் பாதை

நீளம்: 435 கி.மீ

நிலையங்களின் எண்ணிக்கை: 9

நிலையத்தின் பெயர்கள்: சென்னை, பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர், பங்காரப்பேட்டை, பெங்களூரு, சென்னபட்னா, மாண்டியா மற்றும் மைசூரு ஆகியவை ஆகும்.

எக்ஸ்பிரஸ் வே: சென்னை பெங்களூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் வே சாலை பணிகள் நடந்து வருகின்றன. இதே பாதைக்கு அருகே புல்லட் ரயில் கொண்டு வரப்பட உள்ளது.

முதல் திட்டம்: மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதை (MAHSR), அல்லது மும்பை-அகமதாபாத் HSR, மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையையும், குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத்தையும் இணைக்கும் அதிவேக ரயில் பாதையாகும். இது இந்தியாவின் முதல் அதிவேக ரயில் பாதையாக இருக்கும்.

தொடக்கத்தில் இதற்கான கட்டுமானம் ஏப்ரல் 2020 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, மற்றும் திட்டம் டிசம்பர் 2023 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மகாராஷ்டிராவில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், முழு நடைபாதையும் முடிவடையும் தேதி இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும் குஜராத் வழியாக 352 கிமீ பகுதியில் 50 கிமீ (31 மைல்) பகுதியைத் முதல்கட்டமாக 2026ல் திறக்க உள்ளனர். இந்த திட்டம் 2027 இல் முழுமையாக திறக்கப்படும், சூரத்திலிருந்து பிலிமோரா வரை, ஆகஸ்ட் மாதம் 2026ல் முதல் கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.