சென்னை ECR-ல் மிதக்கும் உணவகம்..!

தமிழ்நாடு சுற்றுலாப் பயணிகள் இனி நீரில் மிதந்தபடியே ஹோட்டலில் சாப்பிடும் அனுபவத்தைப் பெறலாம். சென்னை ECR எனப்படும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுகாடு படகு இல்லத்தில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை 5 கோடி ரூபாய் செலவில் உருவாக்கியுள்ள “மிதக்கும் உணவகம்” திட்டம் முடிவடைந்து, திறப்பு விழாவுக்குத் தயாராக உள்ளது.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) மற்றும் கேரள மாநிலம் கொச்சி-யில் அமைந்துள்ள கிராண்டியர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பின் கீழ் இந்த “மிதக்கும் உணவகம்” கப்பல் கட்டுமான பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.இது தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத ஒரு புதிய முயற்சியாகும்.

இந்த மிதக்கும் உணவகம் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் திறக்கப்பட்டு, வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.”சீன்ஸ் குரூஸ்” (Seanz Cruise) என்று பெயரிடப்பட்ட இந்த மிதக்கும் உணவகம், 125 அடி நீளமும் 25 அடி அகலமும் கொண்ட இரு தளங்களைக் கொண்ட கப்பல் ஆகும். இந்த கப்பல் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டு உள்ளது.சீன்ஸ் குரூஸ் சவாரிக்கான கட்டணத் திட்டங்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) மற்றும் கிராண்டியர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களாலும் இறுதி செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் க்ரூஸ் பயணம் சமீபத்தில் டிரெண்டாகி வரும் வேளையில், இந்த புதிய முயற்சி பலராலும் ஈர்க்கப்பட்டு உள்ளது.சீன்ஸ் குரூஸ் கப்பலில் மதிய தேநீர் அருந்தவும், பிற சமூக நிகழ்வுகளுக்காகவும் முன்பதிவு செய்து கொள்ள விரும்பும் மக்களிடமிருந்து ஏற்கனவே கோரிக்கைகள் வர ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த கப்பலில் அலுவலகக் கூட்டங்கள், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் சமூக நிகழ்வுகளும் நடக்க உள்ளது.இந்த திட்டம், தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, ECR பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சீன்ஸ் குரூஸ்-ன் முக்கிய அம்சங்கள்:வகை: இரு தளங்கள் கொண்ட கப்பல்நீளம்: 125 அடிஅகலம்: 25 அடிபயண தூரம்: 1.5 கிலோ மீட்டர்உணவு வகை: புஃபே (Buffet)பாதுகாப்பு அம்சங்கள்: மீட்ப படகு, தீயணைப்பு கருவிகள், லைப் ஜாக்கெட்.கீழ் தளம்: லைவ் மியூசிங், டிஜே ஸ்டேஜ், டிவி ஸ்கிரீன் ஆகியவை உள்ளது.மேல் தளம்: இரவில் நிலவையும், நட்சத்திரத்தையும் ரசிக்கும் வகையில் – Open-air view வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.நேரம்: சீன்ஸ் குரூஸ் கப்பலை காலை 7 மணி முதல் தினசரி அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.