தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மே 31ம் தேதி மாலைக்குள் பாட புத்தகங்களை அனுப்பி வைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டை பொறுத்தவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு ஜூன் 2ம் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டிற்கு தேர்தல் ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதன் பிறகு பள்ளிகள் திறப்பு இருக்கலாம் எனத் தெரிகிறத
அந்த வகையில் பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கிடைக்க செய்யும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று மே 31ம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் தமிழகம் முழுவதும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 4ம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அதன் பிறகு பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்… கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!