உங்க வீட்டிற்கு சூரிய மின்சாரம் அமைக்க SBI கடனுதவி!

நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, SBI வங்கி கடனுதவி வழங்குகிறது.

அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.

அதாவது, மத்திய அரசின் பிரதம மந்திரி சூர்யா கர் திட்டத்தின் கீழ், சோலார் மின் உற்பத்திக்கு கடனுதவி வழங்கப்படும் என்று SBI வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, 3 KW வரை சோலார் பேனல் அமைக்க ரூ.2 லட்சம், 3 KW முதல் 10 KW வரை சோலார் பேனல் அமைக்க ரூ.6 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

MNRE/REC இணையதளத்தில் விண்ணப்பதாரர் பதிவு செய்வது முதல் கடன் வழங்குவது வரை, SBI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறியலாம். இந்த கடனுக்கு முதலில் https://www.pmsuryaghar.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அது நிறைவடைந்த பிறகு https://www.jansamarth.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI வழங்கும் கடன் தொகை

  • 3 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூரை சோலார் பேனலை அமைக்க ரூ.2,00,000 வழங்கப்படுகிறது.
  • 3 KW க்கும் அதிகமான மற்றும் 10 KW திறன் கொண்ட மேற்கூரை சோலார் பேனலை அமைக்க ரூ.6,00,000 வழங்கப்படுகிறது.

இந்த கடனுக்கு வட்டி விகிதம் என்ன?

  • ​​3 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூரை சோலார் பேனல் நிறுவுவதற்கு (ரூ.2 லட்சம்) கடன் என்றால் 7% ஆகும்.
  • 3 KW-க்கு மேல் மற்றும் 10 KW வரை சோலார் மேற்கூரை பேனல் நிறுவுவதற்கு (ரூ.6 லட்சம்) கடன் என்றால் 10.15% ஆகும்.

விண்ணப்பிக்க தகுதி

  1. விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  2. சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு ஏற்ற கூரையுடன் கூடிய வீடு சொந்தமாக இருக்க வேண்டும்.
  3. வீட்டில் சரியான மின் இணைப்பு இருக்க வேண்டும்.
  4. சோலார் பேனல்களுக்கு குடும்பம் வேறு எந்த மானியத்தையும் பெற்றிருக்கக் கூடாது.
  5. கடன் தொகை பெருவதற்கு PAN எண் கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

  • வங்கியின் இணையதளமான bank.sbiஐப் பார்வையிடுவதன் மூலம், கடன்களின் கீழ், தயவுசெய்து SBI சூர்யா கர் திட்டத்திற்குச் சென்று, இப்போதே விண்ணப்பிக்கவும்.
  • இல்லையெனில், நீங்கள் முதலில் https://pmsuryaghar.gov.in இல் விண்ணப்பிக்கலாம் பதிவு செய்யலாம், பின்னர் https://www.jansamarth.in இல் விண்ணப்பிக்கலாம்.