ஊதா ஊதா ஊதா பூ: குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்த நடிகை ரம்பா...

நடிகை ரம்பா குடும்பத்தை நடிகர் விஜய் வெளிநாட்டில் சந்தித்திருந்த நிலையில் அப்போது எடுத்த புகைப்படத்தை ரம்பா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தன்னுடைய குழந்தைகளோடு விஜய் விளையாடிக் கொண்டிருக்கும் அழகிய புகைப்படங்களையும் ரம்பா அதில் பகிர்ந்திருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

நடிகை ரம்பா என்று சொன்னால் 90ஸ் ரசிகர்கள் பலருக்கும் இப்போதும் ஹார்ட் பீட் எகிற தொடங்கிவிடும். அந்த அளவிற்கு 90ஸ் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ரம்பா டாப் இடத்தில் இருக்கும் போது சினிமாவை விட்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து விட்டார். அதற்கு பிறகு சின்ன திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலந்து கொண்ட இவர் தன்னுடைய குடும்ப புகைப்படங்களையும் வீடியோக்களையும் இப்போது வெளியிட்டு இருக்கிறார்.

அதில் நடிகர் விஜய், ரம்பா மற்றும் அவருடைய கணவர் குழந்தைகளோடு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பகிர்ந்த ரம்பா “பல வருடங்களுக்கு பிறகு உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருந்தது விஜய் என்று வாழ்த்துக்களும் தெரிவித்திருக்கிறார்” அதோடு இந்த புகைப்படங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் என்ற ஹேஸ் டேக்கையும் ரம்பா பகிர்ந்திருக்கும் நிலையில் பலரும் வாழ்த்துக்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

ரம்பா மற்றும் விஜய் இருவரும் தனியாக எடுத்து செல்பி புகைப்படங்கள் மற்றும் ரம்பாவின் மகனை விஜய் கொஞ்சி தூக்கி வைத்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் ரம்பாவின் மகள்களோடு விஜய் எடுத்த புகைப்படங்கள் என்று பலவற்றை ரம்பா பகிர்ந்து இருக்கும் நிலையில் இதுதான் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ரம்பா எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜய் உடன் அவர் நடித்த மின்சார கண்ணா திரைப்படத்தில் இடம் பெற்ற ஊதா ஊதா ஊதா பூ பாடலும் அந்தப் பாடலுக்கு விஜய் மற்றும் ரம்பாவின் டான்ஸ் பலருடைய மனதை கவர்ந்தது. இப்போது இவர்களுடைய ரீயூனியனை பார்த்ததும் ரசிகர்கள் பலரும் அந்த பாடலை நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

====

Actress Ramba,Vijay, Tamil Movie, நடிகை ரம்பா, விஜய், மின்சார கண்ணா, தமிழ் திரைப்படம்