சனிக்கிழமை முக்கியமா இதை பண்ணுங்க... தீர்க்க முடியாத கஷ்டங்கள் தீரும்

சில சமயங்களில் மனிதர்களை கஷ்டங்கள் பிடித்துக் கொண்டு ஆட்டி படைக்கும். முதலில் வந்த கஷ்டங்களை எதிர்கொண்டு பட்டு தெளிவதற்குள், மீண்டும் பின்னால் ஒரு பெரிய அடி விழும். இப்படி கஷ்டங்களில் இருந்து மீள முடியாமல் இருப்பவர்கள், இந்த பரிகாரத்தை செய்யலாம். சனி பகவானால் சில பேருக்கு வாழ்க்கையில் ரொம்பவும் தொந்தரவு இருக்கும். கிரக சூழ்நிலை சரியிருக்காது. ஏழரைச் சனி பிடித்துக் கொண்டு ஆட்டி படைக்கும். வேலை இல்லாமல் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் கூட சிலர் கஷ்டப்படுபவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் ஒரு சுலபமான குறிப்பை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றுபவர்களுக்கு சனி பகவானால் வரும் துன்பங்கள் குறையும். தீராத துன்பமும் குறைய தொடங்கும். வாங்க அந்த சுலபமான குறிப்பை நாமும் தெரிந்து கொள்வோம். சனிபகவான் என்றால் அவருக்கு உண்டான கிழமை சனிக்கிழமை. சனிக்கிழமை அன்று பின் செல்லக்கூடிய அனைத்து பரிகாரங்களையும் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை இரவு தூங்க செல்வதற்கு முன்பு ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் உளுந்து போட்டுக்கோங்க. இரண்டு ஸ்பூன் சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் உங்கள் வீட்டில் இனிப்பு சுவையில் எது இருக்கிறதோ, அதை போட்டு இரண்டு ஸ்பூன் தண்ணீர் விட்டு கலந்து அப்படியே ஒரு மூடி போட்டு வைத்து விடுங்கள்.

சனிக்கிழமை காலை அது நன்றாக ஊறி இருக்கும். சனிக்கிழமை காலை 6 மணிக்கு எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு முதல் வேலையாக இந்த உளுந்தை கொண்டு போய் காகத்திற்கு வைத்து விட வேண்டும். உங்களுடைய வீட்டில் சில சமயம் காகம் வராமல் பறவைகள் தான் வந்து அதை சாப்பிடும் என்றாலும் பரவாயில்லை விட்டுவிடுங்கள். பறவைகள் வந்து சாப்பிடட்டும். நீங்கள் காகத்திற்கு வைப்பதாக நினைத்துக் கொண்டு போய் வைத்துவிட்டு வந்து விடுங்கள். அவ்வளவு தான். அதை காகம் வந்து சாப்பிட்டாலும் சரி, பறவைகள் வந்து சாப்பிட்டாலும் சரி நல்லது தான். இந்த பரிகாரத்தை சனிக்கிழமை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்து முடித்திருக்க வேண்டும். ஏனென்றால் அந்த நேரம் தான் சனி ஹோரை. முதல் பரிகாரமாக காகத்திற்கு உளுந்தை வைத்து விட்டீர்கள். அடுத்து சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும். சிவன் கோவிலில் நல்லெண்ணெய் வாங்கி கொடுங்க தானமாக கொடுக்க வேண்டும். நல்லெண்ணெயை சனிக்கிழமை அன்று வாங்க கூடாது. முன்கூட்டியே வேறு ஏதாவது கிழமையில் நல்லெண்ணெயை வாங்கி, வீட்டில் வைத்துக் கொள்ளலாம். வீட்டில் இருந்து கொண்டு போய் நல்லெண்ணெயை சிவன் கோவிலுக்கு உங்கள் கையால் சனிக்கிழமை தானம் கொடுத்து விடுங்கள்.

அடுத்து கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் போது உங்களால் முடிந்த உணவை வாங்கி ஏழைகளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும். முடிந்த உணவு என்றால் இருவது ரூபாய்க்கு இரண்டு இட்லி வாங்கி கொடுத்தால் கூட சரிதான். அது உங்களுடைய சௌகரியம். பணம் காசு உங்கள் கையில் எவ்வளவு இருக்கிறதோ அதற்கு தகுந்தபடி வாங்கி அன்னதானம் செய்யலாம். குறிப்பாக உளுந்தால் செய்யப்பட்ட உணவை வாங்கிக் கொடுப்பது மிகவும் நல்லது. இட்லி தோசை வடை இப்படிப்பட்ட பலகாரங்களாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். கால் ஊனமுற்றவர்கள் இருந்தால் அவர்களுக்கு நீங்கள் உதவி செய்வது இன்னும் இன்னும் நல்ல பலனை கொடுக்கும். காகத்திற்கு உளுந்து வைக்கணும். சிவன் கோவிலுக்கு நல்லெண்ணெய் வாங்கி தானம் கொடுக்கணும். அன்னதானம் செய்யணும். சனிக்கிழமை இந்த மூன்று விஷயங்களையும் நம்பிக்கையோடு நீங்கள் செய்து வாருங்கள் உங்கள் வாழ்வில் நிச்சயம் விடிவு காலம் பிறக்கும். தீர்க்க முடியாத கஷ்டங்கள் தீரும். சனிபகவான் நீங்கள் நன்றாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி ஆசீர்வாதம் செய்வார். நம்பிக்கை இருப்பவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.