தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் விமான பயிற்சி நிறுவனத்திற்காக ஆப்ரேட்டரை தேர்வு செய்வதற்கான டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகம்
ஓடதளத்தை சீரமைத்து அடிப்படை வசதிகளை செய்து தரும் பணிகளை டிட்கோ நிறுவனம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்வு செய்யப்படும் ஆபரேட்டர்கள் நிறுவனம் மூலம் விமான பயிற்சி அளிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
இதன் அடிப்படையில் டிட்கோ நிறுவனம் தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் போடப்பட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக கோவில்பட்டியில் விமான பயிற்சி நிறுவனம் அமைப்பதற்கு ஏற்கனவே தமிழ்நாடு அரசு திட்டமிடப்பட்டு அதற்கான ஓடு தளத்தை சீரமைத்து அடிப்படை வசதிகளை செய்து டிட்கோ நிறுவனம் மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.