UPI மூலம் இனி 5லட்சம் வரை வரி செலுத்தலாம்... RBI அறிவிப்பு...


இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான இரண்டு நாள் நாணயக் கொள்கை குழு (எம்பிசி) கூட்டம் ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்று காலை வெளியிடப்பட நிலையில் நாட்டு மக்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் ஆர்பிஐ அரசுக்கு வரி செலுத்தும் இடத்தில் யூபிஐ பேமெண்ட் வாயிலாகச் செலுத்தப்படும் பணத்திற்கான லிமிட்-ஐ ஒரு நாளுக்கு தற்போது இருக்கும் 1 லட்சம் ரூபாயை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

UPI அல்லது யுனிஃபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் இந்தியாவின் டிஜிட்டல் கனவை நனவாக்கும் முக்கிய கருவியாக மாறியுள்ளது. இது பணம் இல்லாத பொருளாதாரத்திற்கு வழிவகுத்து, பொதுமக்கள் மற்றும் பொருளாதாரத்திற்கும் பல நன்மைகளை வழங்கியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் வெளிநாட்டிலும் யூபிஐ சேவை பயன்படுத்தும் வகையில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது.

UPI பரிமாற்றத்திற்கான பொதுவான வரம்பு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1 லட்சம் ஆகும். இருப்பினும், இந்த வரம்பு வங்கிக்கு வங்கி மாறுபடும் வேளையில் சேவைகளுக்கும் மாறுபடும். உதாரணமாகக் கல்வி நிறுவனங்கள் மற்றும் சுகாதாரம் சேவைக்குப் பணம் செலுத்தும் போது ஒருவர் ஒரு பரிமாற்றத்திற்கு ரூ.5 லட்சம் வரையில் செலுத்த முடியும். இதேபோல் முதலீட்டுச் சந்தை, காப்பீடு மற்றும் வெளிநாட்டு வருமானம் ஆகியவற்றை ஒரு நாளைக்கு ஒரு பரிமாற்றத்திற்கு ரூ.2 லட்சம் வரை செலுத்த முடியும். முக்கியமாக IPO மற்றும் சில்லறை நேரடி திட்டத்தில் (RDS) ஒரு பரிமாற்றத்திற்கு ரூ.5 லட்சம் வரை செலுத்த முடியும். அந்த வகையில் வரி செலுத்தும் போது யூபிஐ வாயிலாக 1 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்த முடியும் என்ற கட்டுப்பாடு இருந்த நிலையில் இதை ஆர்பிஐ வங்கியின் இரண்டு நாள் நாணயக் கொள்கை குழு (எம்பிசி) கூட்டத்தில் 5 லட்சமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

முன்பு வரி தொடர்பான பேமெண்ட்களுக்கு 1 லட்சம் வரையில் மட்டுமே வரி சலுகை அளிக்கப்பட்டது, இதற்கு அதிகமான தொகைக்கு வரி விதிப்பு இருந்தது. இதை தற்போது 5 லட்சமாக உயர்த்தப்பட்டது மூலம் 5 லட்சம் வரையிலான வரி பேமெண்ட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.