இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
தமிழக அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்காக கோட்டைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். கோட்டை கொத்தளத்தில் கொடியேற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியேற்றினார். இதை தொடர்ந்து மு.க. ஸ்டாலில் உரையாற்றினார். அதில் கூறியிருப்பதாவது,
நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். விடுதலைக்காக பாடுப்பட்ட அனைத்து தியாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். விடுதலை என்பது 300 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு கிடைத்தது. நமது நாட்டின் பன்முகத் தன்மையின் அடையாளம் தேசிய கொடி தான். ஆகவே விடுதலையை பாடுபட்டு பெற்று கொடுத்த தியாகிகளை போற்றுவோம்.
விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சிலைகள் அமைக்கப்படுகின்றன. மாநில முதல்வர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி என்று தனது உரையில் கூறினார்.
• விடுதலைப்போராட்ட வீரர்களுக்க மாதாந்திர ஒய்வூதியம் ரூ. 20 ஆயிரத்திலிருந்து ரூ. 21 ஆயிரம்ஆக உயர்வு
• பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
• விடியல் பயணம், புதுமை பெண், மகளிர் உரிமைத் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
• நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
• வறுமையில்லாத சமத்துவமான தமிழ்நாட்டை உருவாக்க திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு கூறியுள்ளார்.