ஆவணி அவிட்டம்: பூணூல் மாற்ற ஏற்ற நேரம்...

தமிழ் மாதங்களில் ஐந்தாவது மாதமாக வரும் ஆவணி மாதத்தை சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான, கொண்டாட்டத்திற்கான மாதம் என்றே சொல்லலாம்.

சூரிய பகவான், சிம்ம ராசியில் தன்னுடைய பயணத்தை துவங்கும் இந்த மாதத்தில், ஆடி மாதம் நடத்தாமல் நிறுத்தி வைத்திருந்த திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவார்கள். அதனால் இதை திருமண மாதம் என்றும், சுப முகூர்த்த மாதம் என்றும் சொல்கிறார்கள்.

ஆவணி மாதம் என்பது திதி, நட்சத்திரங்கள் இரண்டுமே சிறப்பு பெறும் மாதமாகும். இந்த மாதத்தில் வரும் அவிட்டம், மூலம் நட்சத்திரங்களும், சதுர்த்தி திதியும் மிக விசேஷமானதாகும். இந்த ஆண்டு ஆவணி மாதம் ஆகஸ்ட் 17ம் தேதி சனிக்கிழமை துவங்கி, செப்டம்பர் 16ம் தேதி வரை உள்ளது.

மொத்தம் 31 நாட்கள் கொண்ட ஆவணி மாதத்தின் முதல் நாளே சனிப் பிரதோஷ நாளாக அமைந்தது. தொடர்ந்து வரிசையாக விரத மற்றும் விசேஷங்கள் நிறைந்ததாக இந்த ஆண்டு ஆவணி மாதம் அமைகிறது.

ஆவணி அவிட்டம் நாளின் கடந்த வருடத்தில் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு புனித சபதம் எடுக்கப்படுகிறது. இந்த நேரத்தில் புனித மந்திரங்கள் உச்சரிக்கப்பர். பிராமணர்கள் சூரிய உதயத்தில் இருந்து புனித நீராடுவார்கள். ஆவணி அவிட்டம் அன்று பிராமணர்கள் ஜனேயு அல்லது ய்ஜ்பவித் எனப்படும் புதிய புனித நூலை அணிவார்கள் .

இது ஆவணி அவிட்டத்தின் மிக முக்கியமான சடங்கு மற்றும் இந்த நேரத்தில் வேத மந்திரங்கள் உச்சரிக்கப்படும் இது பொதுவாக ஒரு நதி அல்லது குலத்தின் கரையில் நடத்தப்படும். புதிய நூல் அணிந்த பிறகு பழையது ஒரு புதிய தொடக்கத்தை குறிக்கும் வகையில் நிராகரிக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தாண்டு ஆவணி அவிட்டம் ஆகஸ்ட் 19ஆம் தேதி திங்கள் கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் அதிகாலை 4.32 மணி முதல் 5.20 வரை பிரம்ம முகூர்த்தம் நன்றாக உள்ளதாகவும், பிறகு பகல் 12 மணி முதல் 1 மணி வரையும் நல்ல நேரம் இருப்பதால் இந்த நேரத்தில் பூணூல் மாற்றி கொள்ளலாம்.