ஜம்மு காஷ்மீரில் பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டுள்ள மல்லிகார்ஜூன் கார்கே... குடும்பத் தலைவிக்கு ஜாக்பாட்...

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல், இந்த ஆண்டின் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில், நடைபெறுவதை ஒட்டி, மக்களை ஈர்க்கும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ஆனந்த நாக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, வரும் தேர்தல் முடிவில் காங்கிரஸ் கூட்டணி வென்றால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.3000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் காலியாக இருக்கும் ஒரு லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் 11 கிலோ அரிசி வழங்கப்படும். முக்கியமாக ரூ. 25 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும். ஜம்மு காஷ்மிரில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 5 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.