ஓணம் கொண்டாட்டத்தில் ரஜினிகாந்த்: உற்சாக நடன வீடியோ வெளியிட்ட லைகா…
ரஜினிகாந்தின் வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையடுத்து படத்தின் ப்ரோமோஷன்களை லைகா நிறுவனம் தொடங்கியுள்ளது. கடந்த 9ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து மில்லியன் கணக்கில் வியூஸ்களை அள்ளி வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ள நிலையில் ஃபேன் பாயாக ஜெயிலர் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் மிகப்பெரிய அளவில் அனிருத் ரஜினி ரசிகர்களை கவரும் வகையில் இசையமைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையொட்டி தற்போது வெளியாகியுள்ள மனசிலாயோ பாடல் ரசிகர்களை தொடர்ந்து வைப் செய்ய வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தின் சூட்டிங்கில் இணைந்து நடித்த வருகிறார் ரஜினிகாந்த். இன்றைய தினம் ஓணம் கொண்டாட்டத்தை சூட்டிங் ஸ்பாட்டில் செலிப்ரேட் செய்த கூலி டீம், மனசிலாயோ பட பாடலை மீண்டும் ரீ கிரியேட் செய்து ஆட்டம் போட்டுள்ளனர். ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த ஆட்டத்தில் இணைந்த நிலையில் தங்களுடன் இணைந்து ஆட லோகேஷ் கனகராஜையும் ரஜினி கூப்பிடுவதாக இந்த வீடியோவில் காணப்பட்டது.
ஆனால் அவர் கூச்சத்துடன் ஆட மறுத்துவிட்டார். இந்நிலையில் ரஜினியின் எனர்ஜி கொஞ்சமும் குறையாமல் ஒரிஜினல் பாடலை போலவே இந்த ரீகிரியேஷன் பாடலிலும் சிறப்பாக காணப்பட்டதை பார்க்க முடிகிறது. அவரது உற்சாகம் மற்றும் எனர்ஜி வழக்கம் போல ரசிகர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. கூலி படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்டு வருகிறது. படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்து ரஜினியுடன் நடித்து வருகின்றனர். தங்கக்கடத்தலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது.
படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்து அதிரடி ஆக்ஷன் காட்சிகளை லோகேஷ் எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது. கடந்த லியோ படத்தில் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு சூட்டிங்கை மேற்கொண்டதால் தன்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று கூறியுள்ள லோகேஷ் கனகராஜ், இந்தப்படத்தில் அதுபோன்ற எந்த ரிஸ்க்கையும் எடுக்காமல் ரிலாக்சாக படத்தை இயக்கி வருகிறார்.
Onam Vibes with Coolie team!
When THALAIVAR
& team COOLIE
went The VETTAIYAN
way for ONAM
#MANASILAAYO ft. team COOLIE
with the One & Only
#Vettaiyan
@rajinikanth @tjgnan @anirudhofficial @Dir_Lokesh @girishganges @SonyMusicSouth #HappyOnam2024 #Onam pic.twitter.com/w1KJc3E2ia
— Lyca Productions (@LycaProductions) September 15, 2024