சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிது அதில் கொஞ்சம் மக்காச்சோள மாவு சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.
* பால் பாயசம் செய்யும்போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.
* வெண்டைக்காயை எண்ணெய்யில் வதக்க வேண்டும். அப்படி செய்தால் அதில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி விடும். அதன் பின்பு குழம்பில் சேர்த்தால் வழுவழுப்பு இருக்காது. குழம்பும் ருசியாக இருக்கும்.
* சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் கெடாமல் இருக்கும்.
* முட்டையை வேக வைக்கும் பொழுது சில துளிகள் கடலை எண்ணெய், கல் உப்பு சேர்த்தால் எளிதில் வேகும்.
* கொதிக்கும் தண்ணீரை ஊற்றி பாதாமை ஊற வைத்தால் அதன் தோல் எளிதாக உரிந்து வரும்.
* ஊறுகாயில் சிறிதளவு வினிகர் சேர்த்தால் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.
* இட்லி மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை ஊற்றினால் தோசை மொறுமொறுவென்றும், பொன்னிறமாகவும் இருக்கும்.
* மழைக்காலங்களில் உப்பில் நீர் சேராமல் இருக்க, பிளாஸ்டிக் சீட் மீது உப்பை கொட்டி, காற்றுபுகாதவாறு கட்டி வைத்தால் போதும்.
* புளி குழம்பு தயாரிக்கும்போது சிறிதளவு வெந்தயம் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.
* முட்டை கெட்டுப் போகாமல் இருக்க அதன் மீது லேசாக எண்ணெய் தடவி வைக்கலாம்.
* முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கி காற்று புகாத கவர் அல்லது டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் அப்படியே இருக்கும்.
* வாழைப்பூ சுத்தம் செய்யும்போது கையில் சிறிது நல்லெண்ணெய் தடவிக் கொண்டால் கையில் கறை ஒட்டாது.
* காரக்குழம்பில் காரம் அதிகமானால் சிறிது வெல்லம் சேர்த்தால் போதும். காரத்தின் வீரியம் குறைந்துவிடும்.
* சோறு ஒட்டாமலும் உதிரியாகவும் இருக்க, அரிசி ஊற வைக்கும்போது சில ஐஸ் கட்டிகள் சேர்த்து ஊறவைத்தால் சாதம் உதிரியாக வரும்.
* கறிவேப்பிலை வாடாமலும், நிறம் மாறாமலும் இருக்க, தண்ணீரில் அலசி உலர வைத்து, பின்னர் காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் வரை கெட்டுப் போகாது.