இந்த வார ஓடிடி-யில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள்...

* மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சயின்ஸ் பிக்சன் ஹாரர் படம் ‘ஏலியன் ரோமுலஸ்’. இந்த படத்தினை ‘ஈவில் டெட் மற்றும் டோண்ட் ப்ரீத்’ படங்களை பெடே அல்வாரெஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தினை ரிட்லி ஸ்காட் தயாரித்துள்ளார். மேலும் கெய்லி ஸ்பேனி, இசபெலா மெர்சிட், ஸ்பைக் பியர்ன் மற்றும் ஐலீன் வு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஏலியன் சம்பந்தமாக உருவாகி அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இப்படம் 21-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

* ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரித்துள்ள படம் “ராக்கெட் டிரைவர்”. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்கியுள்ளார். பேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை சுனைனா, ஜெகன் நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மறைந்த ஏபிஜே அப்துல் கலாம் இக்கால சூழலில் உயிர் பெற்று வந்தால் எப்படி இருக்கும் என கற்பனை கலந்த கதையாக அமைந்துள்ளது. இப்படம் சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் நேற்று வெளியாகி உள்ளது.

* திஞ்சித் அய்யாதன் இயக்கத்தில் மர்மமான திரில்லர் கதை களத்தில் உருவான மலையாள படம் ‘கிஷ்கிந்தா காண்டம்’. இப்படத்தில் ஆசிப் அலி , விஜயராகவன் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த மாதம் வெளியான இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. நடிகர் ஆசிப் அலி முன்னணி கதாபாத்திரத்தில் அதிக வசூல் செய்த படங்களில் இதுவும் ஒன்றாகம். இப்படம் 2024 -ம் ஆண்டு அதிக வசூல் செய்த 9-வது மலையாளப் படமாகும். இப்படம் 19.11.2024 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. தமிழில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* பல சர்ச்சைகளை கடந்து நயன் தாராவின் ஆவண திரைப்படம் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்-இல் கடந்த 18 ஆம் தேதி வெளியானது. இதில் நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் அவரது முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வந்த பாதையை அதில் காட்சி படுட்தியுள்ளனர். விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தாரா இருவருக்கும் நடந்த திருமண விழாவையும் பதிவு செய்துள்ளனர்.

* பவன் ராஜகோபாலன் இயக்கியுள்ள படம் ‘விவேசினி’. இந்தப் படத்தில் நாசர், காவ்யா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் டிரெக்கிங் சென்றவர்களுக்குள் ஏற்படும் உணர்ச்சிகரமான மோதல்களையும், ஊர் திரும்பிய பிறகு அப்பாவுக்கும் மகளுக்கும் ஏற்படும் உணர்வு மோதல்களையும் அழகாக எடுத்துக்காட்டும் படமாக உருவாகி உள்ளது. திரில்லர் கதைக்களத்தில் இருக்கும் இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

* கன்னட சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவர் ஆக்சன் கிங் அர்ஜுனின் சகோதரி மகன் துருவா சர்ஜா. இவர் மார்டின் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கான திரைக்கதையை அர்ஜூன் எழுதியுள்ளார்.மேலும் கதாநாயகியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் நாளை { 22-ந் தேதி}வெளியாக உள்ளது.

* அமெரிக்க அனிமேஷன் இசை சாகச கற்பனை நகைச்சுவைத் திரைப்படமாகும். இந்த படத்தை விக்கி ஜென்சன் இயக்கியுள்ளார். லும்ப்ரியா எனப்படும் மாயாஜால உலகில் அமைக்கப்பட்ட கதை, இளவரசி எலியன் (ஜெக்லர்) தனது பெற்றோரை அரக்கர்களாக மாற்றிய மந்திரத்தை உடைத்து தனது ராஜ்யத்தை காப்பாற்றும் விதமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.