பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் 84வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் டாக்டர் ராமதாஸை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் சமூக வலைத்தளங்கள் மூலம் டாக்டர் ராமதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.