ரூ.11,999க்கு 250 இன்ச் புரொஜெக்டரா..?

வெறும் ரூ.11,999 விலைக்கு எல்இடி சப்போர்ட், 1080p ரெசொலூஷன், 250 இன்ச் புரோஜெக்சன் போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 420 (Portronics Beem 420) புரொஜெக்டர் விற்பனைக்கு வந்துள்ளது. போர்ட்ரானிக்ஸ் பீம் 420 அம்சங்கள் (Portronics Beem 420 Specifications): இதுவொரு போர்ட்டபிள் டிசைனில் (Portable Design) உருவாக்கப்பட்ட எல்இடி (LED) சப்போர்ட் கொண்ட புரொஜெக்டர் மாடலாகும். அதோடு 1080p ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் மற்றும் 3200 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வருகிறது. ஆகவே, பிக்சர் குவாலிட்டி மிகுந்த தரம் வாய்ந்ததாக இருக்கும்.

மினி தியோட்டரில் பார்க்கும் அனுபவம் கஸ்டமர்களுக்கு கிடைக்கும். இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 420 புரொஜெக்டருக்கு 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. 16:9 அஸ்பெக்ட் ரேசியோ (Aspect Ratio) கிடைக்கிறது. 30 இன்ச் முதல் அதிகபட்சமாக 250 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும்.

இவ்வளவு பெரிய ஸ்கீரினிங் கிடைப்பதால், அதில் பார்ப்பதற்கு புதுவித அனுபவமாக இருக்கும். இந்த பீம் 420 புரொஜெக்டரில் பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. ஆகவே, இந்த புரொஜெக்டரை ஸ்மார்ட்போன் (Smartphones), லேப்டாப் (Laptops), யுஎஸ்பி டிரைவ் (USB Drive), செட்-டாப் பாக்ஸ் (Set-top Boxes), மைக்ரோஎஸ்டி (microSD) கார்டுகள் மற்றும் மல்டிபிள் போர்ட் (Multiple Ports) மூலம் கனெக்ட் செய்து கொள்ள முடியும்.
மேலும், ஹெட்போன் (Head phone), ஹார்டு டிரைவ் (Hard Drive) கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring) மற்றும் வெர்டிகல் கீஸ்டோன் (Vertical Keystone) சப்போர்ட் வருகிறது. கூடவே ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் (Bluetooth Connectivity) இருக்கிறது.

இன்புட் மற்றும் அவுட்புட் போர்ட்களை (Input And Output Ports) பொருத்தவரையில், இரண்டு எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு யுஎஸ்பி (USB) போர்ட் , ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், ஏவி இன்புட் (AV Input) போர்ட் மற்றும் மைக்ரோஎஸ்டி சிலாட் (microSD Slot) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 420 புரொஜெக்டரில் 5W ஸ்டீரியோ (5W Stereo Speakers) சப்போர்ட் வருகிறது.

இதனால் எளிதில் ஸ்மார்ட்போன், லேப்டாப் ஸ்கிரீனை பீம் 420 புரொஜெக்டரில் கனெக்ட் செய்து பயன்படுத்தலாம். இந்த புரொஜெக்டர் வெறும் 955 கிராம் மட்டுமே எடைக் கொண்டுள்ளதால், எளிதாக எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று பயன்படுத்தலாம். இதன் நீளம் 198 மிமீ, அகலம் 80 மிமீ மற்றும் உயரம் 146 மிமீ வருகிறது. இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 420 புரொஜெக்டருக்கு ஒரு வருட வாரண்ட்டி வருகிறது.

வைட் (White) கலரில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த பீம் 420 புரொஜெக்டருக்கு ரிமோட் கன்ட்ரோல் (Remote Control) வசதி வருகிறது. இதன் விலை ரூ.12,999ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அறிமுக சலுகையாக ரூ.11,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 420 புரொஜெக்டரை போர்ட்ரானிக்ஸ்.காம் (Portronics.com), அமேசான்.இன் (Amazon.in) மற்றும் பிளிப்கார்ட்.காம் (Flipkart.com) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

இந்த புரொஜெக்டரின் விற்பனை இன்று (செப்டம்பர் 18) முதல் தொடங்குகிறது. 32 இன்ச் டிவி வாங்கும் செலவில் 250 இன்ச் புரோஜெக்சன் சப்போர்ட் கொண்ட புரொஜெக்டர் கிடைப்பதால், இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 420 மாடலின் விற்பனை நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் எல்இடி புரொஜெக்டர் வாங்க நினைப்பவர்களுக்கு, இது பொருத்தமான தேர்வாக இருக்கும்.