48 மணி நேரத்தில் உயிர் போகச் செய்யும் கொடிய பாக்டீரியா பரவல்!!

வைரஸ் என்றால் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது சீனாவின் ஊகான் மாகாணம். கோடிக்கணக்கான உயிர்களை பலி கொண்ட கொரோனா என்ற அரக்கன் இந்த நாட்டில் தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் உலக நாடுகளுக்கு வேகமாக பரவி ஒரு பதம் பார்த்து விட்டது.

கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவை உருமாற்றம் அடைந்து பல அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியது.தற்பொழுது கொரோனா தாக்கம் குறைந்தாலும் அவை முழுமையாக நீங்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை.இவ்வாறு கொரோனாவின் தாக்கமே முழுமையாக நீங்காத நிலையில் தற்பொழுது ஜப்பான் நாட்டில் புதிய பாக்டீரியா நோய் ஒன்று பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

ஸ்ட்ரெப்டோக்கால் என்று அழைக்கப்படும் இந்த பாக்டீரியா STSS வகையை சார்ந்தது என்று கண்டறியப்பட்டிருக்கிறது.இந்த பாக்டீரியா மனித உடலுக்குள் நுழைந்த அடுத்த 48 மணி நேரத்தில் உயிரை காவு வாங்கிவிடும் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

இந்த பாக்டீரியா தோல் மூலம் ஊடுருவி தொண்டையை பாதிக்கச் செய்யும்.அதன் பின்னர் உடலில் உள்ள சதைகளை தின்று 2 நாட்களில் உயிரை எடுத்துவிடும்.

ஸ்ட்ரெப்டோக்கால் பாக்டீரியா அறிகுறிகள்:

முதலில் தொண்டை பகுதியில் வலி ஏற்படும்.அதன் பின்னர் கை,கால் வலி,உடல் அசதி, காய்ச்சல் ஏற்படும்.இறுதியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டு உயிர் போகும்.

இந்த பாக்டீரியா பாதித்த மனிதர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு நேரிடியாக பரவ வாய்ப்பு குறைவு தான்.ஜப்பானில் சுமார் 970க்கும் மேற்பட்டோர் இந்த பாக்டீரியாவின் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதை தொடர்ந்து பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.இதுவரை இந்தியாவில் இந்த பாக்டீரியாவின் தாக்கம் கண்டறியப்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது.