டிகிரி இருந்தால் போதும் மைக்ரோசாஃப்ட்டில் வேலைவாய்ப்பு..!

மைக்ரோசாஃப்ட் மென்பொருள் நிறுவனத்தில் டேட்டா அனலிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
தற்போது பலரும் பிரபல ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவதை கனவாக வைத்துள்ளனர். இந்த கனவு உங்களுக்கும் இருக்குமேயானால் இந்த வாய்ப்பை மிஸ் செய்யாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
ஏனென்றால் உலகில் உள்ள முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் (Microsoft) சார்பில் டேட்டா அனலிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விபரம் வருமாறு:
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் டேட்டா அனலிஸ்ட் பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்படி ஸ்டேட்டிஸ்டிக்ஸ் (Statistics), கணிதம், அனலிட்டிக்ஸ், டேட்டா சயின்ஸ் என்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், பிசினஸ், எக்கனாமிக்ஸ் அல்லது அதற்கு தொடர்புடைய பிரிவுகளில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும் எஸ்க்யூலெ மற்றும் காமன் டேட்டாபேஸில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பைத்தான் (Python) பயன்படுத்தி விரைவாக டேட்டா அனலிசிஸ் செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர அல்காரிதம் டெவலப்மென்ட் (Algorithm Development), அனலிட்டிக்கல் ஸ்கீல்ஸ் (Analytical Skills), டேட்டா கிளீனிங், Data Evangelism, டேட்டா இன்டிகிரேசன் டேடா இன்டகிரிட்டி, டேட்டா மைனிங், டேட்டா விசுவலைசேஷன், டேடடாபேஸ் குவரிங், ஓரல் கம்யூனிகேசன், ப்ராப்ளம் சால்விங் ஸ்கில்ஸ், ரீசர்ஸ், டெக்னிக்கல் கம்யூனிகேசன் உள்ளிட்டவற்றில் திறமையாக இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி எத்தனை பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் முடிந்த வரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது சிறந்தது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Microsoft இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதரபாத் மைக்ரோசாப்ஃப்ட் நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய https://jobs.careers.microsoft.com/global/en/job/1716104/Data-Analyst?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH