* தேங்காய் துறுவலை மைய அரைக்கவும். அரிசி மாவினை சிறிது நீரில் கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும். * பாத்திரத்தில் பரங்கிகாய் துண்டுகளை போட்டு முழ்குமளவு நீர் ஊற்றி வேகவைக்கவும். * காய் வெந்ததும் உப்பு, நாட்டு சர்க்கரை மற்றும் கரைத்து வைத்த அரிசி மாவினை சேர்த்து கிளறவும். * பின் தேங்காய் விழுதினை சேர்த்து கிளறி, பின் 2 நிமிடங்களில் இறக்கவும். * பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும். * வத்த குழம்புடன் சாப்பிட நன்றாக இருக்கும்.