அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ நகரத்துடன், சென்னை மாநகராட்சி இணைந்து செயல்படுவது குறித்த கலந்துரையாடல் கூட்டம்

சகோதரத்துவ நகரங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி, அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ மாநகராட்சி மேயர் ரான் நிரன்பர்க் – பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமையிலான அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை, ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

2

பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டமைப்பு, திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து ஆணையர் ககன்தீப் சிங் பேடி எடுத்துரைத்ததை அடுத்து, இரு மாநகர மக்களின் ஆக்கப்பூர்வ உறவுகளை மேம்படுத்தவும், கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்திக் கொள்ளும் வகையிலும் இரு மாநகர மக்களின் பண்பு, அறிவுத் திறன், பொருளாதாரத்தை மேலும் வளப்படுத்தும் வகையிலும் ஒத்துழைப்பு நல்க செயல்படுவோம் என இரு மாநகர மேயர்களும் கூட்டாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாமன்றக் கூட்டரங்கை ரான் நிரன்பர்க், சான் ஆன்டோனியோ நகர முன்னாள் மேயர் பில் ஹார்டுபெர்கர், அமெரிக்க துணைத் தூதரகத்தின் துணைத் தூதர் திருமதி ஜூடித் ரவின் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது மாமன்றக் கூட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மேயர் பிரியா அவர்களிடம் விளக்கினார்.