ஒரு சில காரணங்களால் இயற்கையாகவே கருத்தரிக்க முடியாமல், குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும் பெண்களுக்கு செயற்கை கருத்தரிப்பு முறைகள் வரப்பிரசாதமாக இருக்கின்றன. இதில் IVF என்பது மிகவும் பிரபலமான முறையாகும். இந்த கருத்தரிப்பு சிகிச்சை முறை பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.
இந்த கருத்தரிப்பு முறையில், பெண்ணின் கருமுட்டையும், ஆணின் விந்தணுவும் ஆய்வகத்தில் ஃபெர்டிலைஸ் செய்யப்பட்டு, கருவாக மாறிய பின்னர், அந்த எம்ப்ரியோ பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படும். IVF முறையில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிறந்துள்ளனர். ஆனால், ஐவிஎப் முறையில் கருத்தரித்து, கர்ப்ப காலம் முழுவதும் தவறாமல் மருந்து உட்கொண்டு, குழந்தையை நல்லபடியாக பிரவசிப்பது ஒரு பக்கம். IVFஇல் கருமுட்டை சேகரிப்பது முதல் கருப்பையில் கருவை வைத்து அது வளரத் துவங்குவது வரையிலான காலத்தை பொறுமையாக, மன உறுதியுடன் கடக்க வேண்டும்.
அதிகமான செலவு, அடிக்கடி மருத்துவமனைக்கு செல்வது, சுற்றி இருப்பவர்கள் கூறுவது, உடல் மன ரீதியான உளைச்சல், என்று இவற்றை எல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டும். அதே போல, முதல் முறையிலேயே கரு உருவாகி விடாது. பல முறை முயற்சி செய்ய வேண்டியிருக்கும். IVF கருத்தரிப்பு முறையில் என்ன விதமான சோதனைகளும் சவால்களும் இருக்கின்றன.
IVF முறைப்படி கருத்தரிக்க விரும்புவோருக்கு பின்வருபவை பிரச்சினையாக இருக்கின்றது.
* ஐவிஎப் சிகிச்சை முறை செலவு மிக அதிகம் என்று நினைக்கிறார்கள்
* சிகிச்சை முறை வெற்றி அளிக்கும் என்று உறுதி கிடையாது, எனவே கருத்தரிக்க முடியவில்லை முடியாமல் போனால் என்ன ஆகும் என்று கவலைப்படுகிறார்கள்
* சமூகம் எப்படி பார்க்கும் என்று அச்சப்படுகிறார்கள்
* இது மிகவும் வலிமிகுந்த சிகிச்சைக்கு தாங்கிக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை என்று நினைக்கின்றனர்.
இதற்கு அடுத்ததாக தங்களால் இயற்கையாக கருத்தரிக்க முடியாமல் போனால் ஐவிஎப் சிகிச்சையை தேர்வு செய்வதாக 45% பங்கேற்பாளர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் 28% பங்கேற்பாளர்களால் Ivf ஐ தேர்வு செய்ய சௌகரியமாக இருக்காது, சங்கடமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். குழந்தையை தத்தெடுப்பது மற்றும் செயற்கை கருத்தரிப்பு முறையைத் செய்வது என்று இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது, 57% பங்கேற்பாளர்கள் தத்து எடுப்பதை விட குழந்தையை IVF முறையில் பெற விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
IVF ல் இரட்டை குழந்தைகள் இரண்டு வகை:
மோனோசைகோடிக் இரட்டையர் (ஒரேமாதிரி இருக்கும் இரட்டையர்கள்) – இது ஒரு கருவில் உருவாகும் இரண்டு குழந்தைகள். இது அபூர்வம்.
டிஸ்ய்கொடிக் இரட்டையர் – (இரண்டு கருக்களில் உருவாகும் இரட்டையர்கள்) – இரண்டு கருக்களிலும் கருவறையில் ஊன்றி குழந்தைகளாக வளரும்.
IVF ல் இரட்டை குழந்தைகள் உருவாக அமையும் காரணங்கள்:
இந்த காரணங்களை பெற்றோருக்கு புரிதல் மிக அவசியம்.
கர்பப்பையினுள் செலுத்தப்பட்ட கருக்கள் எண்ணிக்கை:
இது மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஒன்றுக்கும் மேற்பட்ட கருவை செலுத்தும்போது, இரட்டையர் உருவாக்க வாய்ப்பு அதிகரிக்கிறது. இருந்தாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட குருவுருவாவதால் ஏற்படும் சுகாதார அபாயங்களால், சமீப காலங்களில் ஒரு கரு மாத்திரம் செலுத்தும் முறை பின்பற்றப்படுகிறது.
பெண்ணின் வயது:
இரட்டை குழந்தைக்கு பெண்ணின் வயது முக்கிய பங்கு வகிக்கிறது. வயது முதிர்வினால் கருமுட்டையின் தரம் பாதிக்க வாய்ப்புள்ளது. தரம் வாய்ந்த ஆய்வகத்தில் உருவாக்கப்பெற்ற கருக்கள் மூலம் இரட்டை குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது.
கருத்தரிப்பு ஊக்க மருந்து:
சினை பையிலுள்ள கருமுட்டையின் வளர்ச்சியை ஊக்குவிக்க கொடுக்கப்படும் மருந்தின் மூலம் அதிக கருமுட்டைகள் உருவாகலாம். இந்த முட்டைகளை கருவாக்கினால் அதிகமான கருவுருவாக வாய்ப்புள்ளது. இந்த கருக்களை ஒன்றுக்கு மேலாக கருவறைக்குள் செலுத்தினால் இரட்டை குழந்தைகள் கருத்தரிக்க வாய்ப்புள்ளது.
மரபணு காரணங்கள்:
மனைவியின் குடும்பத்தில் இரட்டையர் பிறந்த சரித்திரம் இருந்தால் இரட்டை குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்புள்ளது. இயற்கையாக கருத்தரிப்பது போலவே, IVF யிலும் இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.
IVF மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொள்வதின் பலன்கள்:
இரட்டையர் பெற்றுக்கொள்வதன் மூலம் குடும்பங்களுக்கு அநேக நன்மைகள் உண்டு. அவற்றில் சிலவற்றை கீழ் காண்போம்:
ஒரே நேரத்தில் ஏற்படும் குடும்ப வளர்ச்சி: அதிக குழந்தைகள் வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகள் கிடைப்பதால் இது நன்மையாக கருதப்படுகிறது.
பொருளாதார சிக்கனம்: பொதுவாகவே IVF ஆகும் செலவை கருதிக்கொண்டு பார்க்கும்போது, இரட்டையர்கள் பிறப்பது, சிக்கனத்திற்கு வழிவகுக்கும். இதனால் நேரம் மற்றும் செலவு மிச்சமாகும்.
இரண்டு குழந்தைகளும் ஒன்றாக பயணிக்கும் வாய்ப்பு: இரு குழந்தைகளுக்கும் ஒரு தனித்துவ இணைப்பு ஏற்படும். ஏனென்றால் இருவரும் ஒன்றாக வளர்ந்து ஒவ்வொரு முன்னேற்றத்தையும் ஒன்றாகவே அடைந்து ஒருவருடைய வளர்ச்சியில் உறுதுணையாகவும் இருக்கும்.
எதிர்கொள்ள வேண்டிய அபாயங்கள்:
இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்பது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், கர்ப்ப காலத்தில் கீழே கூறப்பட்டுள்ள சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்:
Pre -Eclampsia (உயர் ரத்த அழுத்தம்) : கர்ப்ப காலத்தின் போது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அதன் மூலமாக வீக்கம் ஏற்படும்.
Gestational Diabetes (நீரிழிவுநோய்) : இந்நோய் கர்ப்பகாலத்தில் முதல்முறையாக கண்டுபிடிக்கப்படும். இதன் மூலமாக தாய் மற்றும் குழந்தை இருவரும் பாதிக்கப்படலாம்.
Premature Birth (36 வாரத்திற்கு முன்பாகவே குழந்தை பிறப்பு): இதனால் எடை குறைவாக இருத்தல் மற்றும் வளர்ச்சியில் பிரச்சனைகள் வரலாம்.
Cesarean Section (அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவம்): இந்த முறையில் அதிகமாக இரட்டை குழந்தை பிரசவம் பார்க்கப்படுகிறது.
Twin -Twin Transfusion Syndrome (TTTS) – ஒரே தொப்புள் கொடியில் உருவாகும் இரட்டையர்கள் இந்த நிலையினால் பாதிக்கப்படுவார்கள். இதில் ஏதாவது ஒரு குழந்தைக்கு ரத்த நாளங்கள் சரியாக இயங்காது.
செயற்கை முறை கருத்தரிப்பு (IVF) மூலமாக இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் அதற்கே உரித்தான நன்மைதீமைகள் உண்டு.
இயர்கையாக கருத்தரிப்பதை விட IVF முறையின் மூலம் இரட்டையர் அதிகம் வர வாய்ப்புள்ளது. இந்த முடிவெடுப்பதற்குள் தம்பதியர் உங்கள் கருத்தரிப்பு மருத்துவரிடம் தெளிவாக ஆலோசனை பெற்ற பின்னரே முடிவெடுக்க வேண்டும்.
அது மட்டுமல்லாமல் இந்த முடிவு தாயின்ஆரோக்கியம், அவரது எண்ணங்கள் மற்றும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே எடுக்கவேண்டும்.